எந்த நடிகராலயும் முடியாத ஒன்னு! கேப்டனுக்காக சூர்யா செய்த செயலால் ஆடிப்போன இயக்குனர்

Actor Surya: தமிழ் சினிமாவில் சூர்யா ஒரு முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அஜித், விஜய் இவர்களுக்கு பிறகு மிகவும் புகழ்பெற்ற நடிகராக சூர்யா இருக்கிறார். சிவக்குமார் மகன் என்பதையும் தாண்டி சிவக்குமாரை விட அதிகளவு பெருமைக்குரிய நடிகராகவும் இருக்கிறார்.

சமீபத்தில் கேப்டன் மறைவிற்கு வர முடியாத சூர்யா ஒரு இரங்கல் செய்தியை வெளி நாட்டில் இருந்து கொண்டு வீடியோ மூலம் பதிவிட்டிருந்தார். அதன் பிறகு விடுமுறை பயணத்தை முடித்து சென்னை திரும்பியவுடன் நேராக விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க: யாருங்க விஜய் சேதுபதி? சீக்கிரம் புரிஞ்சிப்பீங்க!… வைரலாகும் கார்த்திக் சுப்புராஜ் போஸ்ட்!… ஜோசியம் தெரிஞ்சிருக்குமோ!

கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சூர்யாவின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிகண்ணன் சூர்யாவை பற்றி ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். அதாவது விஜயகாந்தின்மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இன்றுவரை அவர் சமாதிக்கு ஏராளமானோர் வந்தவண்ணம் இருக்கின்றனர். எம்ஜிஆருக்கு கூட இப்படி யாரும் வரவில்லை. அந்தளவுக்கு விஜயகாந்த் தானதர்மம் செய்திருக்கிறார். விஜயகாந்திற்கு பிறகு தர்மங்கள் செய்யக் கூடிய ஒரே நடிகராக நான் சூர்யாவைத்தான் பார்க்கிறேன் என பாரதி கண்ணன் கூறினார்.

இதையும் படிங்க: கேப்டன் மில்லரில் அதிக சம்பளம் வாங்கிய 5 நடிகர்கள்!.. சிவ்ராஜ்குமாருக்கு இத்தனை கோடியா?!..

அதுமட்டுமில்லாமல் ஒரு நடிகரின் மறைவிற்கு இன்னொரு நடிகர் போஸ்டர் மூலம் இரங்கல் செய்தியை தெரிவிக்க முன்வர மாட்டார்கள். ஆனால் ஒரு போஸ்டரில் சூர்யா மற்றும் கார்த்தியின் புகைப்படத்தோடு விஜயகாந்திற்காக இரங்கல் செய்தியை அறிவிக்கும் வகையில் அந்த போஸ்டரில் இருந்ததாக பாரதிகண்ணன் கூறினார்.

அது ரசிகர்கள் செய்த வேலையாக கூட இருந்தாலும் சூர்யாவின் கவனத்திற்கு போகாமல் இருந்திருக்காது. யார் அப்படி செய்வார்கள்? ஒரு கமல்ஹாசன் விஜயகாந்திற்காக போஸ்டர் அடிப்பாரா? சத்யராஜ் அடிப்பாரா? பிரபு, சத்யராஜ் இவர்கள்தான் அடிப்பார்களா?

ஆனால் சூர்யாவிற்கு அந்த எண்ணம் இருக்கிறது இல்லையா? அதனால்தான் சொல்கிறேன் விஜயகாந்திற்கு அடுத்த படியாக ஏழைகளுக்கு உதவும் ஒரு கர்ணனாக சூர்யா இருப்பார் என்று பாரதிகண்ணன் கூறினார். ஏற்கனவே அகரம் என்ற அறக்கட்டளையை நிறுவி சேவை செய்து வரும் சூர்யா அன்னம் என்ற ஒரு எண்ணத்தையும் கையில் எடுத்தால் கண்டிப்பாக விஜயகாந்த் இடத்தை அவரால் நிரப்ப முடியும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: கேப்டன் மில்லரில் அதிக சம்பளம் வாங்கிய 5 நடிகர்கள்!.. சிவ்ராஜ்குமாருக்கு இத்தனை கோடியா?!..

 

Related Articles

Next Story