Connect with us
captain

Cinema News

கேப்டன் மில்லரில் அதிக சம்பளம் வாங்கிய 5 நடிகர்கள்!.. சிவ்ராஜ்குமாருக்கு இத்தனை கோடியா?!..

Captain miller: ஒருபக்கம் மசாலா படங்களிலும் ஒருபக்கம் நடிப்புக்கு தீனி போடும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ். கோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவரை பற்றி பல விமர்சனங்கள் வெளியே வந்தாலும் எதற்கும் பதில் சொல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கு பிடித்தவற்றை செய்து வரும் நடிகர் இவர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம்தான் கேப்டன் மில்லர். இப்படத்திற்காக நீண்ட தாடி மற்றும் தலைமுடியை வளர்த்திருந்தார் தனுஷ். ஏற்கனவே ராக்கி, சாணி காயிதம் போன்ற ரத்தம் தெறிக்கும் படங்களை இயக்கிய இயக்குனர் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பும் இருந்தது.

இதையும் படிங்க: படம் வேற லெவலா இருக்கும் போலயே! STR 48 கதையை காத்துல பறக்கவிட்ட பிரபலம்

1930 காலகட்டத்தில் நடப்பது போல இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சாதியினரை கோவிலுக்குள் விடாமல் தடுப்பதை எதிர்த்து களமிறங்கும் தனுஷ் வெள்ளைக்காரர்களையும், பண்ணையதாரர்களையும் என்ன செய்தார் என்பதுதான் இப்படத்தின் கதை.

இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், பிரியங்கா மோகன், கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார், சந்தீப் கிருஷ்ணன், நாசர், வினாயகன் என பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 12ம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஓரளவுக்கு வசூலையும் இப்படம் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஆபிஸ் மூடிய விஷயத்தை சொல்ல முடியாமல் திணறும் கோபி!… மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவாரோ!

இந்நிலையில், இந்த படத்தில் அதிக சம்பளம் வாங்கிய 5 நடிகர்கள் பற்றி தெரிந்து கொள்வோம். 5வது இடத்தில் இருக்கும் ஜான் கொக்கன் 60 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறார். 4வது இடத்தில் இருக்கும் பிரியங்கா மோகன் 80 லட்சம் வாங்கியிருக்கிறார். மேலும், 3வது இடத்தில் இருக்கும் சந்தீப் கிஷனுகு 3 கோடியும், 2வது இடத்தில் இருக்கும் சிவ்ராஜ்குமாருக்கு 5 கோடியும் கொடுத்துள்ளனர்.

இப்படத்தின் ஹீரோ தனுஷுக்கு ரூ.30 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு போட்டியாக வந்த அயலான் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இருந்தாலும் இந்த வார முடிவில் எந்த படம் அதிக வசூலை பெற்றது என்பது தெரியவரும்.

இதையும் படிங்க: செம நக்கல்யா உனக்கு!.. மீண்டும் விஜய்யை வான்ட்டட்டா வம்புக்கு இழுத்த மீசை ராஜேந்திரன்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top