Categories: Cinema News latest news

மீண்டும் ஒன்னா ஒரே நேரத்தில் விஜயும் அஜித்தும்! தல விரும்புவதும் அதுதானாம்!..

Ajith vs Vijay: தமிழ் சினிமாவில் விஜய் அஜித் என இரு எதிர் துருவங்களாக ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவிற்குள் வந்து தன்னுடைய கெரியரை ஆரம்பித்தார்கள். ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் முதலும் கடைசியுமாக இரண்டு பேரும் ஒன்றாக நடித்தார்கள்.

அதன் பிறகு இருவருக்கும் வெற்றி தோல்வி இரண்டுமே சரிசமமாக அமைய நீயா நானா என்ற போட்டி இருவருக்குள்ளுமே ஏற்பட்டது. இவர்கள் சும்மா இருந்தாலும் இவர்களைச் சார்ந்த ரசிகர்களால் விஜய் அஜித் இடையேயான போட்டி மேலும் வலுப்பெற்றது.

இதையும் படிங்க: எதிர்நீச்சல்: ஆவேசத்தில் ஈஸ்வரி… அடி வாங்கிய கதிர்… புலம்பி தள்ளும் நந்தினி…

ஆரம்ப காலங்களில் இவர்களின் படங்கள் பண்டிகை காலங்களில் ஒரே நேரத்தில் ரிலீசானாலும் சமீபத்தில் வாரிசு துணிவு படங்களின் மோதல் தான் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது.

அதேபோல அடுத்த படங்களும் ஒரு சரியான போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் அஜித்தின் படத்தில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டு இப்பொழுதுதான் சமூகமாக அந்தப் படத்தின் படப்பிடிப்பே ஆரம்பமாக இருக்கிறது.

இதையும் படிங்க: இப்படி நின்னா கண்ட்ரோல்லாம் காணாம போயிடும்!.. இளசுகளை சோதிக்கும் யாஷிகா ஆனந்த்..

அக்டோபர் 4ம் தேதி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் 3ம் தேதி விஜயின் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பும் தொடங்குகிறது. மீண்டும் வாரிசு துணிவை போலவே விடாமுயற்சி படமும் தளபதி 68 படமும் களத்தில் சந்திக்க இருக்கின்றன.வாரிசு படம் ரிலீஸ் ஆனபோது அதே தேதியில் என் துணிவு படமும் ரிலீஸ் ஆக வேண்டும் என அஜித் நினைத்தார். அதுபோலவே வெளியிட்டு ஜெயித்தும் காட்டினார்.

தற்போது விஜயும் அஜித்தும் மீண்டும் ஒன்றாக களமிறங்கவுள்ளனர். அதேபோல், வாரிசு – துணிவு போல இந்த படங்களும் ஒன்றாக வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: விஜய்யை விடாமல் துரத்தும் ரஜினி?.. லியோ அப்டேட்டுக்கு போட்டியாக எதை இறக்கியிருக்காரு பாருங்க!..

Published by
Rohini