மீண்டும் அமாவாசையா.?! இப்போ அது உங்களுக்கு செட் ஆகுமா கட்டப்பா.!?

by Manikandan |
மீண்டும் அமாவாசையா.?! இப்போ அது உங்களுக்கு செட் ஆகுமா கட்டப்பா.!?
X

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் , ஹீரோவாக மாறியவர்கள் பலர் அதில் மிக முக்கியமானவர் சத்யராஜ். ஆரம்பம் முதலே வில்லன் வேடத்தில் நடித்து ஹீரோ ஆனபிறகும், வில்லன் கதாபாத்திரம் கலந்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

அதன் பிறகு தற்போது தனக்கு ஏதுவான, தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்த கட்டப்பா, கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தி அப்பா போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.

இதையும் படியுங்களேன் - ஒரு கேவலமான கதை இருக்குனு சொன்னேன்.! உடனே அந்த மனுஷன ஹீரோ ஆகிட்டாங்க.!

தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு அப்பாவாக நடித்துள்ளார். இன்று இப்பட ட்ரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில், பேசிய சத்யராஜ், எனக்கு மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது என்று கூறினார்.

அதுவும் அந்த வில்லன் வேடம் மிகவும் அழுத்தமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனை பார்த்த ரசிகர்கள், மீண்டும் வில்லன் என்றால் அமைதிப்படை அமாவாசை கதாபாத்திரம் போன்ற ஒரு கதாபாத்திரம் வந்தால் தான் நடிப்பார் போல என கூறிவருகின்றனர்.

Next Story