சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் பராசக்தி. படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவிமோகன், அதர்வா போன்றோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். படம் ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கின்றது.
ஒரு புரட்சிகரமான கதை பின்னணியில் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. தீப்பந்தத்தை ஏந்தி போராடும் ஒரு மாணவனாக சிவகார்த்திகேயன் இதில் நடித்துள்ளார். ஹிந்தி திணிப்ப்பை எதிர்த்து ஒரு காலத்தில் ஒட்டுமொத்த மாணவர்களும் களம் இறங்கி போராடினார்கள்.அப்படியொரு கதைகளம்தான் இந்த பராசக்தி. அதனால் புரட்சிகரமான வசனங்கள், ஆவேசமான நடிப்பு என இந்தப் படம் ஒரு புது அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க போகிறது.
இது சிவகார்த்திகேயனுக்கு 25வது படம். மிகவும் ஸ்பெஷலான படமாகவும் இது இருக்கும் என சிவகார்த்திகேயன் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். அதே நேரம் ஜிவி பிரகாஷுக்கும் இது 100வது படம். இரண்டு பேருக்குமே பராசக்தி படம் ஒரு பெரிய அந்தஸ்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பராசக்தி படத்தை பற்றி ஜிவி பிரகாஷ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனுடன் அமரன் திரைப்படத்தில்தான் முதன் முதலில் ஜிவி இணைந்தார். பராசக்தி படம் இருவரும் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாகும். அமரன் திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இன்னொரு பக்கம் சுதா கொங்கராவுடன் ஜிவி ஏற்கனவே சூரறை போற்று திரைப்படத்தில் இணைந்தார். அந்த ஆல்பமும் செம ஹிட்.
அதனால் பராசக்தி படத்திலும் ஆல்பம் நல்ல படியாக அமைந்திருக்கிறது. கண்டிப்பாக மூன்று ப்ளாக்பஸ்டர் பாடல்கள் இருக்கும். நாங்க எல்லா பாடல்களையும் கேட்டாச்சு. உங்களுக்கும் மிகவும் பிடிக்கும் என ஜிவி கூறியுள்ளார்.
