அமீர் குறித்து நெத்தியடி பதில் கொடுத்த ஐசு… அண்ணன் - தங்கை உறவில் விழுந்த விரிசல்… என்ன நடந்தது?
Amir aishu: பிக்பாஸில் கலந்துக்கொண்ட டான்ஸர் அமீரின் தங்கையாக அறியப்பட்ட பிக்பாஸ் ஐசு. அவர் குறித்து பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் கலந்துக்கொண்டவர் டான்ஸர் அமீர். வைல்ட் கார்டாக வந்தாலும் அவருக்கு நிறைய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்துக்கொண்ட நடிகை பாவ்னியை காதலித்தார். தற்போது இருவரும் ரிலேசன்ஷிப்பில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: பாக்யராஜால் பள்ளியை விட்டே வெளியேறிய பானுப்பிரியா… அதன்பின் என்ன நடந்ததுன்னு தெரியுமா?
இவர் நிகழ்ச்சியில் இருக்கும் போது தன் வாழ்வில் நடந்த கதையை பேசி இருப்பார். அப்போது யாரும் இல்லாத எனக்கு முதல் மாணவியாக வந்தது அலீனா மற்றும் அவர் அம்மா ஷாஜி தான் என்றும் பின்னர் அவர்கள் என்னை அவர் வீட்டில் தங்க வைத்தனர். எனக்காக நிறைய செய்தனர் என்றார். இதனால் அவர்களுக்கு ரசிகர்கள் மீது நல்ல அபிப்ராயம் கிடைத்தது.
அதனை தொடர்ந்து ஷாஜியின் முதல் மகளாக ஐசு இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் கலந்து கொண்டார். முதலில் அவருக்கு ஆதரவு அலை வீசினாலும், சக போட்டியாளரான நிக்சனுடன் அவர் இணைந்து அடித்த கூத்தாலும் பிரச்னை வெடித்தது. ஐசுவை மோசமாக விமர்சித்தனர்.
இதையும் படிங்க: உற்சாகத்தில் இளையராஜா போட்ட மெட்டு…. இன்று வரை அதை முறியடிக்க பாடலே இல்லை…!
அமீர் கூட ஒரு பேட்டியில் ஐசு உள்ளே போனதுக்கு எனக்கும் சம்மந்தம் இல்லை. என்னிடம் யாரும் சொல்லவே இல்லை என்றார். அதை தொடர்ந்து அமீரை ஐசு குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் அன்பாலோ செய்தனர். இந்நிலையில் தற்போது பேட்டி கொடுத்து கொண்டு இருக்கும் ஐசு அமீர் குறித்து பேசி இருக்கிறார்.
அமீர் தான் என்னுடைய நடனம் இவ்வளவு வளர்ந்ததுக்கு காரணம். அவரால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கேன். என் மாஸ்டர் தான் அவர் மூலம் நான் பிக்பாஸ் போனதை மறுக்க மாட்டேன். ஆனால் பிக்பாஸ் டீம் சில விஷயங்கள் என்னிடம் இருந்ததால் மட்டுமே ஓகே செய்தனர் என்றார். அமீருடன் இணைந்து பேட்டி கொடுப்பீர்களா எனக் கேட்டதுக்கு அவர் குறித்தே நான் பேச விரும்பவில்லை என முடித்துக் கொண்டார்.