ஐஸ்வர்யாவை லவ் பண்ண அப்பவே தனுஷ் பாத்த வேலை!.. கடுப்பான அந்த ஹீரோ!. இவ்வளவு நடந்திருக்கா?!..
Aishwarya Dhanush: ஐஸ்வர்யா தனுஷ் கல்யாணம் இப்போது வேண்டும் என்றால் விவகாரத்தில் முடிந்து விடலாம். ஆனால் அவர்கள் இருவரின் காதல் தொடங்கிய போது சில கள்ள விளையாட்டுக்களை கூட செய்தார்களாம். அப்படி எவ்வளோ ரிஸ்க் எடுத்து ஐஸ்வர்யாவை தனுஷ் கைப்பிடித்தார் என்ற சுவாரஸ்ய தகவல்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவிக்கும் போது, ஐயா படத்தின் படப்பிடிப்பு சென்றேன். அப்போ பேசிய நெப்போலியன் 'என்னங்க எப்போ பாரு போயஸ் வாசலிலே மீடியா நிற்கிறது. ஐஸ்வர்யா காதல் தான் இப்போ நாட்டுக்கு இப்போ தேவையான விஷயமா?' என்று கேட்டார்.
இதையும் படிங்க: 4 கோடி போனா போகட்டும்!.. ஆனா அமீருக்கு கொடுக்க மாட்டேன்!.. சூர்யா செய்வது சரியா?…
ஏனெனில் அப்போது தான் நடிகராக தனுஷ் வளர்ந்து கொண்டு வந்தார். இருவருக்கும் தீவிரமான காதல் இருந்தது. அவரை காதலிக்கவே தனுஷ் தனியாக போயஸ் கார்டனில் வீடு எடுத்து தங்கி அவரை லவ் பண்ணி வந்தார். அப்போது அந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டது. சரத்குமாரும் தனுஷை ரஜினியின் மருமகனா என்ற பொறாமையில் பேசியது போன்றே இருந்தது.
அவருக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு பொறாமை இருந்தது. ரஜினியே சம்மதித்து ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது. அப்போது வரவேற்பு நாளில் ரஜினியின் நண்பரும், தெலுங்கு ஸ்டாருமான மோகன் பாபு ஓரமாகி ஒதுங்கி மணமக்களையே பார்த்து கொண்டு நின்றார்.
எப்போதுமே ரஜினி வீட்டு விழாவில் மோகன் பாபு ஓடியாடி வேலை செய்வார். ஆனால் ஐஸ்வர்யா திருமணத்தில் சுணக்கமாகவே இருந்தார். அவருக்கு தன் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையா? இல்ல அப்போ தனுஷ் இருந்த நிலைமையா என்பது எங்களுக்கே சந்தேகமாக தான் இருந்தது. எதோ ஒரு கோபம் அவர் அந்த நிகழ்வில் முழுவதும் ஒதுங்கி தான் இருந்தார்.
இதையும் படிங்க: உனக்கும் எனக்கும் தான் பிரச்சினை! மகளுக்காக சரணடைந்தாரா ரஜினி.. பின்னணியில் நடந்த சம்பவம்
ஆனால் அப்படி பலராலும் மோசமாக விமர்சிக்கப்பட்ட தனுஷ், இன்று மாமனார் வீட்டுக்கு பக்கத்திலே பெரிய அரண்மனை போன்று வீட்டை கட்டிவிட்டார். இருந்தும் ஐஸ்வர்யா தனுஷுக்கு செம சப்போர்ட்டாக இருந்தார். அவரின் திறமையை போல இவரின் உதவியாலும் தான் அவர் வளர்ந்தார். ஆதர்ஷ தம்பதிகளாக இருந்தவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தது. பலருக்கும் அதிர்ச்சிதான் என அவர் கூறினார்.