தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கோபத்தில் பட இயக்குனர் எடுத்த மாஸ் முடிவு!

by muthu |   ( Updated:2023-05-16 07:55:27  )
தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கோபத்தில் பட இயக்குனர் எடுத்த மாஸ் முடிவு!
X

நடிகர் விஜய் உடன் பிரபல நடிகை நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய், தற்போது நடிக்கும் LEO படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.

S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக விஜய் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார். இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் உடன் பிரபல நடிகை இணைந்து நடிக்க மறுத்ததாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் இயக்குனர் மஜித் இயக்கத்தில் வெளிவந்த தமிழன் படத்தில் முதலில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராயிடம் கால்சீட் கேட்கப்பட்டது என்றும் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஐஸ்வர்யா ராய் மறுத்ததாகவும், இதனால் கோபமடைந்த இயக்குனர் மஜித், ஐஸ்வர்யா ராய் போல உலக அழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ராவை அனுகி நடிக்க வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழன் படத்தினை எஸ். ஏ. சந்திரசேகர் திரைக்கதை அமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் டி. இமான் தமிழன் படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இயக்குனர் மணிரத்னம் சகோதரர் வெங்கடேஷ் தயாரிப்பில் தமிழன் திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று படம் தோல்வி அடைந்ததும், அப்போது பரபரப்பான செய்தியாக இருந்தது.

Next Story