More
Categories: latest news tamil movie reviews

ஐஸ்வர்யா ராஜேஷ் விட்ட குறட்டை தூள் கிளப்பியதா?.. தூங்க வைத்ததா?.. டியர் விமர்சனம் இதோ!..

இந்த வருஷம் வாராவாரம் புது படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜிவி பிரகாஷ் டார்ச்சர் செய்து வந்த நிலையில் அது என்னோட ஹோம் கிரவுண்ட் ஆச்சே.. நானும் என் பங்குக்கு இந்த வருஷமும் வந்து கொஞ்சம் வச்சு செய்றேன் என ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் செய்துள்ள சம்பவம் தான் டியர் திரைப்படம்.

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்துள்ள டியர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அர்ஜுன் என்னும் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷ் டிவி சேனலில் வேலை பார்க்கும் நபராக நடித்துள்ளார். தீபிகா எனும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குன்னூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் பெண்ணாக வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: உலகத்துலயே பொண்டாட்டியை ஒருதலையா காதலிக்கிறது இவராத்தான் இருப்பாரு!.. ரோமியோ விமர்சனம் இதோ!..

குட் நைட் படத்தில் மணிகண்டன் குறட்டை விட்ட நிலையில், இந்தப்படத்தில் நான் லேடி நடிப்பு அசுரன் என்பதைக் காட்டும் விதமாக ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விட்டு நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் ஜிவி பிரகாஷ் கும் திருமணம் நடைபெறும் நிலையில், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் ஐஸ்வர்யா ராஜேஷின் குறட்டை சத்தம் ஜிவி பிரகாஷை படாத பாடு படுத்துகிறது. அதனால் பாதிக்கப்படும் நபர் போல நடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்கிறார். மனைவி அடிச்சாலே வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கும் கணவர்கள் மத்தியில் குறட்டை விட்டதற்காக விவாகரத்து கேட்கும் கணவராக ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: எதிர்ப்பை மீறி அந்த மாதிரி பொண்ணை நடிக்க வைத்த பாக்கியராஜ்!.. ரிசல்ட் என்னாச்சு தெரியுமா?..

அதன் பின் வாழ்க்கையையும் கணவன் மனைவி உறவையும் புரிந்து கொண்டு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் கெட்டுப்போவதில்லை என்கிற வாழ்க்கை தத்துவங்களை புரிந்து கொண்டு வாழ்ந்தார்களா? அல்லது அவசரத்தில் விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து விடும் தம்பதியினர் போல பிரிந்தார்களா? என்பதுதான் டியர் படத்தின் கதை.

முதல் பாதி சுவாரசியமாக சென்றாலும் இரண்டாம் பாதி ஜவ்வு போல இழுவையாக செல்வதால் ரசிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தியேட்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் விட அதிகமாக குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்து விடுகின்றனர்.

டியர் – ஃபியர்!
ரேட்டிங் – 2.25/5

Published by
Saranya M

Recent Posts