நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு!.. ஐஸ்வர்யா ராஜேஷை ஏடாகூடமா ரசிக்கும் புள்ளிங்கோ!..

by சிவா |
நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு!.. ஐஸ்வர்யா ராஜேஷை ஏடாகூடமா ரசிக்கும் புள்ளிங்கோ!..
X

சென்னையில் பிறந்த தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் அப்பா ராஜேஷ் தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர். ஐஸ்வர்யா சிறு வயதாக இருக்கும்போது அவர் இறந்துவிட்டார். ஐஸ்வர்யாவின் தாய் நாகமணி நடன கலைஞராக இருந்தவர்.

aishwarya

ஐஸ்வர்யாவின் தாத்தா, அத்தை என பலரும் சினிமாத்துறையில் இருந்தவர்கள்தான். எனவே, ஐஸ்வர்யாவுக்கு இயல்பாகவே சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த ஐஸ்வர்யா நடன கலைஞராக மாறினார். கல்லூரியில் தோழிகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்தவர்.

aishwarya

மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு பரிசு வாங்கி இருக்கிறார். அவர்களும் இவர்களும் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அட்டக்கத்தி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் ரம்மி உள்ளிட்ட சில படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.

aishwarya

மணிகண்டன் இயக்கிய முதல் படமான காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதன்பின் மெல்ல மெல்ல சில படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு நடித்தார்.

aishwarya

ஆனால், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, விஷால் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவரவில்லை. வட சென்னை படத்தில் மட்டும் தனுஷுடன் நடித்தார். அதோடு சரி. விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அந்த படம் இப்போது வரை வெளியாகவில்லை.

aishwarya

எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பை பெற முயற்சி செய்து வருகிறார். அந்தவகையில், ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

aishwarya

Next Story