சிவகார்த்திகேயனை பார்த்து சீன் போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்!.. இந்த படமாவது ஓடணும்னு வயிறாரா வாழ்த்துங்க!
நடிகர்கள் தங்கள் படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பிரியாணி விருந்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நடிகர் அஜித் பலமுறை தானே சமைத்து பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். சமீபத்தில் கூட தனது பைக் குழுவுடன் காட்டுப்பகுதியில் பிரியாணி சமைத்து பரிமாறிய காட்சிகள் வெளியாகின.
அமரன் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னதாக நிறைவடைந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல லெக் பீசா பார்த்து தனது டீமுக்கு தன் கையாலே பிரியாணி விருந்தை பரிமாறினார்.
இதையும் படிங்க: நீங்க நல்லா நடிச்சாலும் படம் ஏன் ஓடுறதில்ல?!.. அஜித்திடம் கேட்ட கேள்வி!.. ஏகே சொன்ன நச் பதில்!..
இந்நிலையில், வளையம் படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது படக்குழுவுக்கு பிரியாணி விருந்து வழங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பல படங்கள் படுதோல்வியை சந்தித்தன.
இந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் நடித்த மூன்று படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்த நிலையில், அவருடன் இணைந்து டியர் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு மீண்டும் தோல்வியை கிடைத்தது. இந்நிலையில், வளையம் திரைப்படம் வந்து தனக்கு வெற்றியை கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து போட்டு உள்ளாரா? இத்தனை வயிறு வாழ்த்தினாலாவது படம் வெற்றி அடையுமா என்பதை பார்ப்போம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரஜினி படத்துக்கே கண்டிஷனா?!.. இது என்னடா வேட்டையனுக்கு வந்த சோதனை!..
திறமையான நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து விட்டு ஹீரோயின் சென்ட்ரிக் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அவரது படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதை காலங்களுடன் வெளியாகி வந்தாலும் மிகப்பெரிய வெற்றியை பெறுவதில்லை.
கடந்த ஆண்டு ஃபர்ஹானா மற்றும் தீராக் காதல் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டியர் படத்தில் குறட்டை விடும் பெண்ணாக சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கலைவாணருக்கும், எம்ஆர்.ராதாவுக்கும் உள்ள அந்த ஒற்றுமையை… அட ஆமா!.. இப்பதான் தெரியுது!