Connect with us
vettayan

Cinema News

ரஜினி படத்துக்கே கண்டிஷனா?!.. இது என்னடா வேட்டையனுக்கு வந்த சோதனை!..

6 மாதங்களுக்கு முன்பு சினிமா உலகை காப்பாற்ற வந்த கடவுளாக ஓடிடி நிறுவனங்கள் இருந்தது. அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பெரிய நடிகர்களின் படங்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கினார்கள். சில புதிய படங்கள் தியேட்டருக்கு வராமல் நேரிடையாக கூட ஓடிடி-யில் நேரிடையாக வெளியானது.

சூர்யா கூட தனது சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களை ஓடிடி-யில்தான் வெளியானது. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படம் கூட தியேட்டரில் வெளியாகாமால் ஓடிடியில்தான் வெளியானது. எனவே, ‘தியேட்டரில் இந்த படம் ஓடுமா?’ என்கிற சந்தேகம் தயாரிப்பாளருக்கு வந்தால் உடனே ஓடிடி பக்கம் தள்ளிவிட்டார்கள்.

எனவே, சினிமா உலகை காப்பற்ற வந்த கடவுளாகவே ஓடிடி நிறுவனங்களை பார்த்தார்கள் தயாரிப்பாளர்கள். மக்களிடம் ரீச் ஆக வேண்டும் எனில் தங்கள் சேனலில் நிறைய படங்கள் இருக்க வேண்டும் என நினைத்த ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு புதிய படங்களை அதிக விலை கொடுத்து வாங்கினார்கள்.

எனவே, இதையே காரணமாக காட்டி நடிகர்கள் தங்களின் சம்பளங்களை உயர்த்தினார்கள். விஜயின் சம்பளம் 200 கோடியை தொட்டதற்கு கூட காரணம் ஓடிடி நிறுவனங்கள்தான். ஓடிடி நிறுவனங்கள் கொடுக்கும் பணத்தை நடிகர்களுக்கு சம்பளமாக கொடுத்துவிடலாம் என தயாரிப்பாளர்கள் கணக்கு போட்டனர். ஆனால், அவ்வளவு கோடிகளை கொடுத்து வாங்கிய படங்கள் அதிக ரசிகர்களால் பார்க்கப்படவில்லை. எனவே, ஓடிடி நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டது.

இதையும் படிங்க: கேப்டன் டிவி ஆரம்பிச்சதும் விஜயகாந்த் போட்ட முதல் கண்டீசன்! அட இந்தளவுக்கு நல்லவரா?

இனிமேல் படம் நன்றாக இருந்தால் மட்டுமே படத்தை வாங்குவது, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றால் மட்டுமே படத்தை வாங்குவது, அதுவும் முன்பு போல இல்லாமல் குறைவான விலைக்கு வாங்குவது என ஓடிடி நிறுவனங்கள் முடிவெடுத்தது. இதையடுத்து புதிய படங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்குவதை ஓடிடி நிறுவனங்கள் நிறுத்திவிட்டது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தை கூட 45 நிமிடம் பார்த்துவிட்டுதான் விலையை நிர்ணயிப்போம் என அமேசன் நிறுவனம் சொல்லி இருப்பதாக கூட ஒரு செய்தி வெளியானது. ஒருபக்கம், ஓடிடியில் விஜயின் கோட் படம் 110 கோடிக்கும், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் 95 கோடிக்கும் விலை போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top