Connect with us
viji

Cinema News

கேப்டன் டிவி ஆரம்பிச்சதும் விஜயகாந்த் போட்ட முதல் கண்டிஷன்! அட இந்தளவுக்கு நல்லவரா?

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர். ரஜினி, கமல் இவர்களுக்கு அடுத்தபடியாக கேப்டனின் புகழும் இந்த சினிமாவில் ஓங்கி இருந்தது. ஜெயலலிதா, கருணாநிதி, எம்ஜிஆர் அவர்களின் மறைவிற்கு வந்த கூட்டத்துக்கும் அதிகமான மக்கள் விஜயகாந்த் இறந்த பிறகு அவரைத் தேடி வந்தனர்.

அந்த அளவுக்கு பெரும் புகழை பெற்ற மனிதராக வாழ்ந்தார் விஜயகாந்த். சினிமாவில் தான் அவருடைய சாதனையா என்றால் இல்லை. அரசியலிலும் அவருடைய ஆதிக்கம் மேலோங்கியது. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக சரியான கடமையை ஆற்றினார் விஜயகாந்த். சினிமாவில் இருக்கும் போதும் சரி அரசியலுக்கு வந்த பிறகும் சரி மக்கள் நலனே தனது முதல் கடமை என்பதில் உறுதியாகக் கொண்டவர் விஜயகாந்த்.

இதையும் படிங்க: எத்தனை படம் பண்ணினாலும் லைஃப்லயே மறக்க முடியாத படம் இதுதான்… இயக்குனர் லிங்குசாமி

இந்த நிலையில் பிரபல செவன் சேனல் நிறுவனர் மாணிக்கம் நாராயணன் விஜயகாந்த் பற்றி சில விஷயங்களை கூறினார். வேட்டையாடு விளையாடு படத்தின் போது மாணிக்கம் நாராயணன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த போது அவருக்கு சரியான அறிவுரைகளை கூறி தக்க சமயத்தில் காப்பாற்றியவர் விஜயகாந்த் என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதைப் போல அவர் இக்கட்டான நிலைமையில் இருக்கும் போது பலமுறை காப்பாற்றியவரும் விஜயகாந்த் தான் என மாணிக்கம் நாராயணன் கூறினார் .இந்த நிலையில் விஜயகாந்த் கேப்டன் டிவி ஆரம்பித்த நேரத்தில் ஒரு கண்டிஷனை போட்டாராம். அதாவது செவன் சேனல் நாராயணனிடம் பழைய 200 படங்கள் இருக்கின்றன. அந்த படங்களை எல்லாம் நாம் வாங்கி விடுவோம். அவர் உண்மையான மனிதர். யாருக்கும் துரோகம் செய்யாதவர்.

manickam

manickam

இதையும் படிங்க: எம்ஜிஆர் கொடுத்த முத்தம்… ரெண்டு நாளா முகத்தைக் கழுவாமல் இருந்த நடிகை..!

இந்த தமிழ் திரை உலகில் நேர்மையான மனிதரும் கூட. அதனால் அவருடன் கான்ட்ராக்ட் வைத்துக் கொள்வோம் என முதன் முதலில் மாணிக்கம் நாராயணனுடன் காண்ட்ராக்ட் வைத்து இந்த கேப்டன் டிவியை ஆரம்பித்தார் விஜயகாந்த் என மாணிக்கம் நாராயணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதன் பிறகு நாராயணனிடம் 50 படங்களை வாங்கி வெளியிட்டார்களாம் கேப்டன் டிவி.

google news
Continue Reading

More in Cinema News

To Top