அட சமந்தான்னு நினைச்சிட்டோம்!.. ஓவர் டோஸ் கவர்ச்சியில் அதிரவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!..

அப்பா ராஜேஷும், பாட்டியும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர்கள். ஐஸ்வர்யாவின் அம்மா ஒரு நடன கலைஞராக இருந்தார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம் பிடித்தபின் நடனத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு அதற்கான பயிற்சிகளை எடுத்தார். மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
மானாட மயிலாட 3வது சீசனில் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. பல முயற்சிகளுக்கு பின் ப.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தில் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் என சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
அடுத்து காக்கா முட்டை படத்தில் 2 சிறுவர்களின் அம்மாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அந்த படத்திற்கு பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார். குறிப்பாக விஜய் சேதுபதியுடன் அதிக படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில், நயன்தாராவை போல சிங்கிள் ஹீரோயினாக, கதையின் நாயகியாக நடிக்க துவங்கினார்.
தி கிரேட் இண்டியன் கிச்சன், கா பெ ரணசிங்கம், பூமிகா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா ஆகிய படங்களில் நடித்தார். இதில், பெரும்பாலான படங்கள் ஓடவில்லை. ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து டியர் என்கிற படத்திலும் நடித்தார். இப்போது, கருப்பர் நகரம், மோகன்தாஸ் என சில படங்களில் நடித்து வருகிறார்.
பல படங்களில் நடித்தாலும் விஜய் சேதுபதியை தவிர மற்ற பெரிய ஹீரோக்கள் யாரும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஜோடி போட்டு நடிப்பதில்லை. எனவே, சமீபகாலமாக கவர்ச்சி உடைகளை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அவரின் புதிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது சமந்தாவா? ஐஸ்வர்யாவா? என ஸ்டன் ஆகி வருகின்றனர்.