போச்சு… ஒட்டுமொத்த நம்பிக்கையை உடைத்த தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி… என்னங்க இப்படி ஆச்சு!

by Akhilan |
போச்சு… ஒட்டுமொத்த நம்பிக்கையை உடைத்த தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி… என்னங்க இப்படி ஆச்சு!
X

Dhanush-Aishwarya: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்து இருக்கும் நிலையில் அடுத்தக்கட்ட அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கின்றனர். இது சினிமா வட்டாரத்தில் அடுத்த பேசுபொருளாகி இருக்கிறது.

கஸ்தூரிராஜாவின் மகனும் நடிகருமான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டது. இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கர்ப்பமா இருந்தத மறச்சிட்டேன்!… ரஜினி பதறிட்டாரு!.. கவர்ச்சி நடிகை சொல்றத கேளுங்க!…

அப்பொழுது சினிமாவில் வளர்ந்து கொண்டு இருந்தார் தனுஷ். திருமணத்திற்கு பிறகு அவரின் வளர்ச்சி அசுரத்தனமாக மாறியது. பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை நடித்துவிட்டு வந்திருக்கிறார். நடிப்பில் உயர்ந்து கொண்டே இருந்த நேரம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடமிருந்து அதிர்ச்சியான தகவல் வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம் என்பது.

இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ரஜினியுடன் ஐஸ்வர்யா தன்னுடைய மகன்களுடன் வசித்து வருகிறார். அதே வேலையில் தனுஷ் தன்னுடைய தந்தை கஸ்தூரிராஜா உடன் பசித்து வருகிறார். இருவரும் பிரிவதாக அறிவித்தாலும் தற்போது வரை விவகாரத்து கூறவில்லை. அதனால் அவர்கள் இணைந்து விடுவார்கள் என கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்தது.

இதையும் படிங்க: அம்மா-கணவன் லிப்கிஸ் சர்ச்சைக்கு இந்திரஜா கொடுத்த பதில்… அவங்களும் பாதிக்கப்பட்டு இருக்காங்களே!..

ஆனால் பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பரஸ்பர விவகாரத்துக்கு கூறி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தரப்பு மனு அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் வரும் என எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Next Story