வயசானாலும் உங்க அலும்பல் தாங்கல.! ஐஸ்வர்யா ராயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.! காரணம் இதுதானா.?!
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், உலக அழகி பட்டம் வென்ற பின்னர், தமிழில் ஜீன்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்ப்பார்.
அந்த சமயம் மிக பெரிய ஜாம்பவான் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்திலும் நடித்திருப்பார். அதில் அவரது நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. அதன் பின்னர், பாலிவுட்டில் பிரபாலமாக தொடங்கினார். மீண்டும் அங்கு மார்க்கெட் கொஞ்சம் சரிந்ததும், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் சிறப்பான நாடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் மார்க்கெட் உள்ள நடிகையாக வலம் வந்தார் ஐஸ்வர்யா ராய்.
அப்படி இரு முறை தன் நடிப்பு திறமையை வெளிக்கொணர்ந்த இயக்குனர் மணிரத்னம் என்று கூட பாராமல் தற்போது ஐஸ்வர்யா ராய் செய்யும் செயல் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.
இதையும் படியுங்களேன் - வலிமைக்கு முதலில் வைத்த தலைப்பு இதுவா.?! நல்ல வேலை அஜித் தப்பிச்சிட்டார்.! இங்க ரணகளமே வந்திருக்கும்.!
இதில் ஷூட்டிங் எல்லாம் முடிந்தது. தற்போது பேட்ச் வேலைகள் எனப்படும் சில குளோசப் வசனமில்லா காட்சிகள் எடுக்கப்படும். அதற்காக ஐஸ்வர்யா ராயை படக்குழு சென்னை அழைத்துள்ளது.
ஆனால், ஐஸ்வர்யா அதனை மறுத்துள்ளார். நான் வர முடியாது நீங்கள் வேண்டுமானால் மும்பை வந்து ஷூட்டிங் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டாராம். இதனால், படக்குழு என்ன செய்வதென்று தெரியாமல் மும்பை சென்று அங்கு செட் அமைத்து வருகிறதாம். அந்த பேட்ச் ஒர்க் ஷூட்டிங்கில் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.