கோட் டிரெய்லரை பார்த்துவிட்டு அஜித் அனுப்பிய மெசேஜ்!.. நெகிழும் வெங்கட்பிரபு...

by சிவா |
goat
X

Vijay ajith: அஜித்தும், விஜயும் சம காலத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள். விஜய் அவரின் அப்பா இயக்குனர் என்பதால் சினிமாவில் சுலபமாக நுழைந்தார். ஆனால், அஜித்தோ சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இருவருமே காதல் கதைகளில் நடிக்க துவங்கி பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியவர்கள்.

ஒருகட்டத்தில், இருவரும் போட்டி நடிகர்களாகவும் மாறினார்கள். எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் போல விஜய் - அஜித் என்கிற போட்டியும் உருவானது. இருவருக்கும் ரசிகர்கள் உருவானார்கள். பில்லா, மங்காத்தா போன்ற திரைப்படங்கள் அஜித்துக்கு அதிக ரசிகர்களை உருவாக்கியது.

இதையும் படிங்க: இதுக்காக தான் இந்த டைட்டில்.. இனிமே எவனும் சொல்லவே கூடாது… உண்மையை சொன்ன வெங்கட் பிரபு..

இத்தனைக்கும் தனது ரசிகர் மன்றங்களையே கலைத்தவர்தான் அஜீத். கடந்த 20 வருடங்களுக்கும் மேல் விஜயின் போட்டி நடிகராக அஜித் இருக்கிறார். அவரின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கடுமையாக மோதிக்கொள்கிறார்கள். குறிப்பாக டிவிட்டரில் ஹேஷ்டேக்குகள் மூலம் வன்மத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதை செய்ய வேண்டும் என அஜித், விஜய் என இருவரும் கேட்டுக்கொண்டும் அவர்களின் ரசிகர்கள் அதை நிறுத்தவில்லை. அதேநேரம், இருவரும் போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்டாலும் அவர்களுக்கு இடையே போட்டியோ, பொறாமையோ இல்லை என்றுதான் விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

கோட் படத்தின் கதையை அஜித்திடம் வெங்கட்பிரபு சொன்னபோது ‘சூப்பர்டா. விஜயை வச்சி பண்ணு. 100 மங்காத்தா போல வரணும்’ என சொல்லி வாழ்த்தியிருக்கிறார். இதை வெங்கட்பிரபு பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். தற்போது கோட் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியிருக்கிறது.

ஹாலிவுட் படங்களை போல பக்கா ஆக்சன் மற்றும் சேஸிங் காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கிறது. இந்த டிரெய்லர் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்நிலையில், கோட் படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு ‘டேய் சூப்பரா இருக்குடா.. விஜய்க்கும், படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள் சொல்லிருடா’ என அஜித் எனக்கு மேசேஜ் அனுப்பி இருக்கிறார் என வெங்கட்பிரபு சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: டபுள் தளபதி சம்பவத்துக்கு ரெடியா? நீங்களே இப்படி இறங்கி வந்தா எப்படி? பெரிய இடமே சொல்லியாச்சு…

Next Story