Categories: latest news

Ajith vs Vijay: மதுரை தல கோட்டை! புதுசா யாரும் நுழைய முடியாது.. விஜய்க்கு எதிரா பொங்கிய ரசிகர்கள்

நேற்று அஜித் நடித்த மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆனது. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்திற்கு எப்படி ஒரு ரெஸ்பான்ஸை கொடுத்தார்களோ அதே மாதிரியான ஒரு வரவேற்பைத்தான் ரீ ரிலீஸிலும் மக்கள் கொடுத்து வருகின்றனர். முதல் நாள் முதல் காட்சியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததையும் பார்க்க முடிந்தது. இந்த பொங்கல் எந்த ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸாகததால் மங்காத்தா படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக அஜித் கோட்டை என கருதப்படும் மதுரையில் அஜித் ரசிகர்கள் படத்தை பெரியளவில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு தியேட்டரில் விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. படம் ஓடிக் கொண்டிருக்கும் போது டிவிகே கட்சியை உயர்த்தியபடி விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர். அதற்கு அஜித் ரசிகர்கள் இது அதற்கான இடம் இல்லை என்று சொல்லி அவர்களை கட்டுப்படுத்தியிருக்கின்றனர்.

படம் முடிந்து வெளியே வந்ததும் மீண்டும் அதே மாதிரியான செயலில் விஜய் ரசிகர்கள் ஈடுபட அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மதுரையில் ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அஜித் ரசிகர்கள் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்க. ஆனா ஒரு புதிய கட்சி வந்துருக்கு . அதுக்கு மட்டும் போடாதீங்க.

இத்தனை வருஷத்தில் புதுசா நிவாரணம் தருவாராம். குழந்தைகளை அழைத்து கிஃப்ட் கொடுப்பாராம். அதெல்லாம் நம்பாதீங்க. மற்ற கட்சிக்கு வேண்டுமானால் ஓட்டு போடுங்க. அந்த கட்சிக்கு மட்டும் போடாதீங்க. மதுரை தல கோட்டைடா. விஜய்க்கு ஓட்டு போட விட மாட்டோம் என்று ஆவேசமாக பேசுவதை பார்க்க முடிந்தது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

8 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago