அஜித்திற்கு சரியான போட்டி கார்த்தி தான்.! வெளியானது அந்த பிரமாண்ட ரகசியம்.! மிரண்டுபோன திரையுலகம்..

by Manikandan |   ( Updated:2022-06-21 00:27:24  )
அஜித்திற்கு சரியான போட்டி கார்த்தி தான்.! வெளியானது அந்த பிரமாண்ட ரகசியம்.! மிரண்டுபோன திரையுலகம்..
X

தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை கவனமாக அதுவும் நல்ல கதையாமசம் , மற்றும் ஹீரோயிசம் கொண்ட கதைக்களங்களை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் கார்த்தி.

தனது படத்தின் மீதான நம்பிக்கை காரணமாக தனது படம் யாருடைய படத்துடன் மோதுவது போல இருந்தாலும் , அசராமல் களமிறக்கி வெற்றி கண்டும் வருகிறார். அப்படி தான் வரும் தீபாவளி தினத்தில் சர்தார் படத்தை களமிறக்க உள்ளார்.

இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே 17 நாட்கள் ஷூட்டிங் நடைபெறுகிறதாம். அந்தளவுக்கு பிரமாண்டமாக கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கி வருகிறதாம்.

இதையும் படியுங்களேன் - தகப்பா என்ன இதெல்லாம்.? இணையத்தில் வெங்கட் பிரபு செய்த வேலைய பாருங்க...

இதனை பார்த்த சினிமாவாசிகள், தற்போது அஜித்திற்கு போட்டி கார்த்தி தான் போல என சிலாகித்து வருகின்றனர். ஆம், அஜித் நடித்து வரும் அவரது 61வது திரைப்படமும் வரும் தீபாவளிக்கு தான் ரிலீசாக உள்ளதாம். அதற்கான வேளைகளில் படக்குழு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறதாம்.

அப்போ இந்த தீபாவளி கண்டிப்பாக சினிமா ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமையப்போவது தற்போது உறுதியாகிவிட்டது.

Next Story