ஆரம்பிச்சுட்டாங்கய்யா போட்டிய!.. விஜயை பின் தொடரும் அஜித்.. லேட்டா வந்தாலும் விடமாட்டோம்ல!..
தமிழ் சினிமாவில் இரு பெரும் பில்லர்களக வளர்ந்து நிற்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்களின் வளர்ச்சி அளப்பறியாதது. ஒன்றாகவே ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்குள் நுழைந்து அவரவர் பாணியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு சினிமாவில் இன்று உச்சம் தொட்ட நடிகர்களாக போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் வெளிப்படையாக கூறாவிட்டாலும் அவர்களின் ரசிகர்களால் அவர்களுக்கிடையே போட்டிகள் உருவாகிக்கொண்டிருக்கிறது. அதுவும் துணிவு, வாரிசு படங்களில் இருந்தே அந்த போட்டி வலுப்பெற்று விட்டது என்றே சொல்லலாம். இதற்கு முன் அவர்களின் படங்கள் ஒன்றாக வெளிவந்து கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆன நிலையில் சமீபத்தில் அந்த போட்டிக்கு வித்திட்டது துணிவு மற்றும் வாரிசு படங்கள்.
அதனை தொடர்ந்து மேலும் போட்டியை வலுப்பெற ஆரம்பித்தார்கள் அவர்கள் ரசிகர்கள். ஒரு பக்கம் லியோ படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் அஜித்தின் 62 வது படத்தை இயக்கும் பொறுப்பு இப்பொழுது தான் மகிழ் திருமேனியின் கைக்கே சென்றிருக்கிறது.
இந்த இரு படங்களும் வாரிசு மற்றும் துணிவு படங்கள் மாதிரியே தீபாவளி அன்று ஒன்றாக மோதும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் அஜித்தின் படத்திற்கு ஏற்பட்ட சில பல பிரச்சினைகளால் அஜித்தின் 62 வது படம் ரிலீஸ் தள்ளிப் போவது என உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் அஜித் 62 வது படத்தின் தலைப்பு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் படத்திற்காக மூன்று தலைப்புகள் தயாரித்து ந்த்திருப்பதாகவும் அது மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் இதற்கு முன்னதாக வெளிவந்த துணிவு மற்றும் வாரிசு படங்களின் தலைப்புகள் ரிலீஸுக்கு சில தினங்களுக்கு முன்புதான் தலைப்பை வெளியிட்டார்கள்.
ஆனால் இந்த முறை விஜயின் படத் தலைப்பை ஆரம்பித்திலேயே வெளியிட்டிருப்பதால் அதே முறையை தான் அஜித் படத்திற்கும் பின்பற்றுகிறார்கள் என்று கூறிவருகின்றனர். அதாவது அஜித் 62 வது படத்தின் தலைப்பு எப்படி ‘லியோ’ தலைப்பை முதலிலேயே வெளியிட்டார்களோ அதே போல தான் அஜித் படத் தலைப்பையும் முதலிலேயே வெளியிடப் போகிறார்களாம். . இதன் மூலம் லியோ படத்தை பின்பற்றும் அஜித் 62 வது படம் என் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த தடவை இவர்களின் போட்டி ஆரம்பித்திலேயே தொடங்கிவிட்டார்கள் என்றும் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க : கம்மி பட்ஜெட் படத்துக்கு இவ்வளவு கோடி கடனா? இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட அருண் விஜய்…