அஜித், ஆதிக் கூட்டணியில் படம் எடுக்க போட்டா போட்டி… வெளிநாட்டில் மாஸ் காட்டிய குட்பேட் அக்லி

aathik, ajith
Goodbadugly: அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தால் சோர்வாக இருந்த அஜித் ரசிகர்களைத் தட்டி எழுப்பியுள்ளது குட் பேட் அக்லி. இந்தப் படம் இந்தளவு அபார வெற்றி பெற காரணம் ஆதிக் தான். அவர் ஒரு அஜித் ரசிகர் என்பதால் இதை ஒரு ஃபேன் பாய் படமாகவே எடுத்துள்ளார்.
இதுநாள் வரை ரசிகர்கள் அஜித்தை எப்படி எல்லாம் பார்க்க நினைத்தார்களோ அப்படி எல்லாம் எடுத்துள்ளார் ஆதிக். இதுதான் படத்தின் வெற்றிக்குக் காரணம். இந்தப் படம் குறித்த சிறப்புத் தகவல்களை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
அஜித், ஆதிக் கூட்டணியை வைத்து மறுபடியும் படம் பண்ணனும்னு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நினைக்கிறாங்க. அடுத்து அதே கூட்டணியை வைத்து இட்லி கடையைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் அடுத்த படத்தைத் தயாரிக்கிறது.
அதே போல குட் பேட் அக்லி படத்தை விநியோகித்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவன ராகுல் தனியாகத் தயாரிப்பாளராகி அஜித், ஆதிக் கூட்டணியை வைத்துப் படம் பண்ணலாம் என நினைக்கிறார். அஜித் சாரைப் பொருத்தவரை ஒரு இயக்குனரைப் பிடித்துவிட்டால் அவருடன் தொடர்ந்து படம் நடிப்பார். அந்த வகையில் அஜித் ஆதிக்குக்குக் கொடுக்க 100 சதவீத வாய்ப்பு இருக்கு என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
அஜித்சாரைப் பொருத்தவரை அவரை ரசிகர்களுக்கு என்னமோ ஈர்க்கிறது. அந்த வகையில் படத்துல முதல் சீன்ல இருந்து கடைசி வரை ரசிகர்கள் கொண்டாடுற வகையில் படத்தை எடுத்துருக்காரு ஆதிக் ரவிச்சந்திரன்.
அர்ஜூன்தாஸைப் படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்தது அஜித் தான். அவருக்கு நடிக்க நிறைய ஸ்பேஸ் கொடுத்துருந்தாரு. கிளைமாக்ஸ் காட்சில அஜித்தையே அடிப்பாரு. அருண்விஜய்க்கு என்னை அறிந்தால் படம் வந்ததுக்கு அப்புறம்தான் அவருக்கு வெளிச்சமே கிடைச்சது. ஒரு படம் வெற்றி அடைஞ்சா கோடம்பாக்கம் மட்டுமல்ல. தமிழ்நாடு மட்டுமல்ல.
உலகளவில உள்ள தமிழர்கள் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. வெளிநாட்டுல எல்லாம் படம் சூப்பர். இது அஜித்துக்கான படம். அவங்க ரசிகர்களுக்கான படம். இந்த வைப் காமன் ஆடியன்ஸையும் போய் ரீச்சாகி விட்டது. அதனால இந்தப் படம் பெரிய வெற்றிப்படம். இந்தப் படத்தைப் பார்த்து காமன் ஆடியன்ஸே அஜித் ரசிகர்கள் ஆகிட்டாங்க என்கிறார் பாலாஜி பிரபு.