அஜித் பைக் ரெய்டும் ஐடி ரெய்டும்!...ஏகே-61 படத்தின் பரிதாப நிலை!...லீக்கான ஷாக்கிங் நியூஸ்....

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் இன்னும் பெயர் கூட வைக்காத படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 25 நாள்கள் சூட்டிங் உள்ள நிலையில் அஜித் திடீர் திடீரென்று பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக புறப்பட்டு விடுகிறார். இதில் நடிகையையும் சேர்த்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்.
இதையும் படிங்கள் : கமல் நான் அத பத்தி பேசப் போறேன்…! நீங்க வேணும்னா…? மேடையில் மெய்சிலிர்க்க வைத்த ரஜினி….
இதனால் பாதி நாள்கள் இப்படியே கழிந்துவிடுகிறது. அஜித் சூட்டிங்கை தவிர்த்து வருகிறார் என்றெல்லாம் பேசி வருகின்றனர். இந்த நிலையில் அஜித் மட்டும் இதற்கு காரணம் இல்லையாம். படத்தை பைனான்ஸ் பண்ணுனது மதுரை அன்புவாம். ஏற்கெனவே அவர் மேல் ஐடி ரெய்டு வழக்கு போய்க்க்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் படத்திற்காக அவரிடம் இருந்து பணம் வருவது தெரிந்தால் இன்னும் சிக்கலாக போய்விடும் என்பதற்காக நிதி இல்லாமல் பட சூட்டிங் தள்ளி போய்க் கொண்டிருக்கிறதாம். மேலும் இது தான் காரணம் என தெரிந்தால் கேவலமாக இருக்கும் என்பதால் அவ்வப்போது அஜித்தை பைக் ரைடு அனுப்பி வைப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.