தளபதி - 67 போஸ்டரை பார்த்து சிலாகிக்கும் ரசிகர்கள்!.. இத அப்பவே அஜித் பண்ணிட்டாரு.. பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்..
ஒரு வார காலமாகவே தளபதி - 67 வாரம் என அறிவித்து விஜய் ரசிகர்கள் விஜயைக் கொண்டாடி வருகிறார்கள். அதற்கேற்ப தளபதி - 67 படக்குழுவும் கடந்த இரண்டு நாள்களாக படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களை சற்று வித்தியாசமாக அறிமுகப்படுத்தியது.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை என்று படத்தில் உள்ள கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி இணையத்தில் வைரலாக்கினார்கள். அதன் படி படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், அர்ஜூன், மிஷ்கின் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
விஜய்-லோகேஷ் கூட்டணி என்பதால் ரசிகர்களின் ஆர்வத்திற்கு அளவில்லாமல் இருக்கின்றது. மேலும் அனிருத்தும் இதில் சேர்ந்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனால் தளபதி - 67 படம் ஒரு தரமான சம்பவமாக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் இணையத்தில் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தளபதி - 67 படத்தின் தலைப்பும் வெளியாக இருக்கிறது. அதனால் இணையவாசிகள் மிகவும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் விஜயின் போஸ்டர் தளபதி 67 படத்தில் சற்று வித்தியாசமாக ஆங்காங்கே இரத்தத்தில் சிதறிக் கிடப்பது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இதைப் பார்த்து விஜய் ரசிகர்கள் மிகவும் சிலாகிக்க அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெட்டிசன்கள் இத அப்பவே அஜித் செய்து விட்டார் என்று பில்லா - 2 பட போஸ்டரை குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். பில்லா - 2 போஸ்டரிலும் இந்த மாதிரி ப்ளட் ஆர்ட்டில் டிசைன் செய்யப்பட்டிருக்கும். இதை குறித்தும் விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் சற்று மோதல் வெடித்துள்ளது.
இதையும் படிங்க : நடிகராவதற்கு முன்பே மணிரத்னம் படத்தில் நடித்த அஜித்… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!