Connect with us
ajith

Cinema News

மீண்டும் நடுவிரல் சர்ச்சையில் சிக்கிய அஜித்! எப்பவோ வந்த படத்தால் மறுபடியும் மாட்டிக்கினாரே

Actor Ajith: தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நடிகராக இருப்பவர் அஜித். அவர் மீது சமீப காலமாக பல சர்ச்சைகள் இருந்தாலும் பொதுவாக பார்க்கப்படும் பொழுது மற்ற நடிகர்களை விட மிகவும் விரும்பத்தக்க நடிகராக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றார் அஜித். தற்போது அஜித் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக அஜித் விடாமுயற்சி படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரே நேரத்தில் மாறி மாறி இரு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் அஜித். இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

இதையும் படிங்க: என்னம்மா இப்படி இறங்கிட்ட!.. பிட்டு பட நடிகையை ஓவர்டேக் பண்ணும் சீரியல் நடிகை…

மூன்று கேரக்டர்களில் நடிக்கும் அஜித் அந்த போஸ்டரில் நடுவிரல் காட்டி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். இதுவரை அஜித் எந்த ஒரு படத்திலுமே மோசமான காட்சிகளில் நடித்ததும் இல்லை. ஆடைகளிலும் மிகவும் கவனமாக இருப்பார். ஆனால் இந்த ஒரு போஸ்டர் அஜித்தின் டோட்டல் இமேஜையும் காலி செய்து விட்டது.

இருந்தாலும் படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு அக்லி என்ற வார்த்தைக்காக ஒருவேளை ஆதிக் இந்த மாதிரி நிற்க சொல்லி இருக்கலாம் என வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறினார். இருந்தாலும் அஜித் ஒரு முறைக்கு பலமுறை இதைப்பற்றி ஆலோசித்த பிறகே இந்த போஸ்டரை வெளியிட சொல்லியிருக்கலாம் என அந்தணன் கூறினார்.

இதையும் படிங்க: மூன்று முடிச்சி போடும் முரட்டு சிங்கிள்!.. வெளியானது பிரேம்ஜியின் திருமண பத்திரிக்கை!..

இருந்தாலும் அந்த போஸ்டரில் அந்த ஒரு விரலை மட்டும் பிளர் செய்து காட்டிருப்பார்கள் .இதைப் பற்றி தொகுப்பாளர் ஒருவர் அந்தணனிடம் இதே மாதிரியான ஒரு காட்சியில்தான் வில்லன் படத்திலும் அஜித் நடித்திருந்தார். அந்த படத்திலும் அவர் அந்த விரலை காட்டி நடித்திருப்பார். அப்பவே இந்த செய்தி வைரலானது. ஆனால் இப்பொழுது இருக்கிற மாதிரி பெரிய அளவில் பேசப்படவில்லையே ஏன் என கேட்டார்.

அதற்கு அந்தணன் அப்போது இருந்த அஜித்தின் இமேஜ் வேறு. இப்போது இருக்கும் அஜித்தின் இமேஜ் வேறு. அதனால் தான் இந்த அளவுக்கு இந்த செய்தி பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது என அந்தணன் கூறினார். இந்த தொகுப்பாளர் சொன்ன பிறகுதான் அஜித் இதே மாதிரி நடுவிரலை வில்லன் படத்திலும் காட்டியிருக்கிறார் என நமக்கு தெரிய வந்திருக்கிறது.

இதையும் படிங்க: ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடியா?!.. மொத்த பட்ஜெட்டும் வந்துடுச்சே!.. கோலிவுட் கத்துக்கணும்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top