மூன்று முடிச்சி போடும் முரட்டு சிங்கிள்!.. வெளியானது பிரேம்ஜியின் திருமண பத்திரிக்கை!..

பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்த கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி. அதாவது வெங்கட்பிரபுவின் தம்பி. வெங்கட்பிரபு எப்போது இயக்குனராக மாறினாரோ அப்போதிலிருந்து பிரேம்ஜியும் பிரபலமாக துவங்கினார். அதற்கு காரணம் வெங்கட் பிரபுவின் எல்லா படத்திலும் பிரேம்ஜி இருப்பார்.

வெங்கட்பிரபு கதை இல்லாமல் கூட படமெடுப்பார். ஆனால், பிரேம்ஜி இல்லாமல் படம் எடுக்க மாட்டார் என்றே சொல்வார்கள். தான் எழுதும் கதையில் பிரேம்ஜிக்கான ஸ்கோப் இல்லை என்றாலும் ஏதோ ஒரு வேடத்தில் அவரை நடிக்க வைத்துவிடுவார் வெங்கட் பிரபு. அப்படி பிரேம்ஜி நடித்த முதல் படம்தான் சென்னை 28.

Venkat Prabhu and Premji

Venkat Prabhu and Premji

சிம்புவின் ஸ்டைலை காப்பி அடித்து மேனரிசம் செய்து ரசிகர்களிடம் பிரபலமானார் பிரேம்ஜி. சென்னை 28 படத்தில் இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதேபோல், வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா மற்றும் கோவா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பிரேம்ஜி. கோவா படத்தில் ஒரு வெள்ளைக்கார ஹீரோயினும் அவருக்கு கிடைத்தது.

இசையில் ஆர்வமுள்ளவர் பிரேம்ஜி. அவரின் தம்பி யுவன் சங்கர் ராஜா இசையில் பல பாடல்களை பிரேம்ஜி பாடி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவிடம் உதவியாளராகவும் பல படங்களில் வேலை செய்திருக்கிறார். சினிமாவில் பெண்களை பார்த்து ஜொள்ளுவிடும் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரேம்ஜிக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.

wedding

இந்த வருடம் ஜனவரி 1ம் தேதி டிவிட்டரில் புத்தாண்டு வாழ்த்து சொன்னபோது ‘இந்த வருடம் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்’ என டிவிட்டரில் பதிவிட்டார் பிரேம்ஜி. உடனே, அவர் திருமணம் செய்து கொள்ளும் பெண் யார் ஊடகங்கள் தேடியது. 42 வயதான பிரேம்ஜி 22 வயதான ஒரு இளம் பாடகியை திருமணம் செய்யப்போவதகவும் செய்திகள் கசிந்தது.

இந்நிலையில், பிரேம்ஜியின் திருமண பத்திரிக்கை வெளியாகி இருக்கிறது. வருகிற ஜுன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் அவரின் திருமணம் நடைபெறவுள்ளது. மணப்பெண்ணின் பெயர் இந்து என பத்திரிக்கையில் இருக்கிறது. திருமணம் முடிந்தபின் சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Next Story