அப்பாவை விட அஜித் தான் கெத்து… தடாலடியாக பதில் சொன்ன ஜேசன் விஜய்.. கடுப்பான ரசிகர்கள்!

பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மகனாக இருந்தாலும் முதல் சிலபடங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் தான் நடிகர் விஜய். இருந்தும் மனம் தளராமல் தொடர்ச்சியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு கோட்டையை பிடித்து வைத்து இருக்கிறார். இப்போதைய சூழலில் அவரின் வாரிசான ஜேசன் கோலிவுட்டில் இறங்கி இருக்கிறார்.

விஜயின் தவப்புதல்வன் ஜேசன் சஞ்சய். பெரும்பாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை அறிந்து வைத்தது இப்படி தான். ஆனால் சஞ்சய் சினிமாவிற்கு படித்து வருகிறார். சில ஆவணப்படங்களை இயக்கி இருக்கிறார் என அவ்வப்போது சில தகவல்களும் வெளிவரும்.

இதையும் படிங்க: வானத்தை போல விஜயகாந்தையே ஓவர்டேக் பண்ணிட்டாரே!.. விஜய் உருவாக்கிய அன்பு தம்பிகள்!.. வைரலாகும் வீடியோ மீம்!..

இப்படி இருக்க முதல் படமே மாஸ் அறிவிப்பாக லைகா தயாரிக்கும் படத்தினை ஜேசன் இயக்குகிறார் என்ற தகவலால பலரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றனர். கண்டிப்பாக ஜேசன் சொன்ன கதை வலுவாக இருந்ததாலே லைகா ஒப்புக்கொண்டிருக்கலாம்.

விஜயின் பேருக்காக மட்டுமே இத்தனை பெரிய நிறுவனம் அவரை தங்களுடைய படத்தினை இயக்க ஒப்புக்கொள்ளாது என பலரும் கிசுகிசுத்து வருகின்றனர். படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டரில் ஜேசனுக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இருக்கிறது.

இதையும் படிங்க: விஜயை தொடர்ச்சியாக இயக்க காத்திருக்கும் டாப் இயக்குனர்கள்.. அப்போ அரசியல் எண்ட்ரி அம்போவா! என்னப்பா இது!

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு விஜயுடன் சில நிமிடங்கள் ஜேசன் நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜேசனிடம் ஒரு பேட்டியில் பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது எனக்கு அஜித் அங்கிளை ரொம்ப பிடிக்கும். அவர் மேன் ஆஃப் கெத் என்று சொல்லி சிலாகிக்க வைத்து இருக்கிறார். எங்கப்பா தாண்டி இரண்டு நடிகர்களில் அஜித்தை அடுத்து விஜய் சேதுபதியை பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர். அஜித் ரசிகர்களோ ஆச்சரியத்தில் உள்ளனர். லைகா தரப்பில் சஞ்சய் புக்காகி இருக்க அதே நிறுவனத்தில் அஜித்தின் விடாமுயற்சியும் தயாரிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story