சமூக வலைத்தளங்களில் சமீபத்திய நாட்களாகவே அதிகமுறை உச்சரித்த வார்த்தை தளபதி என்று தான் இருக்கும். ஒரு பக்கம் தன்னுடைய 68வது பட வேலைகள், இன்னொரு பக்கம் அரசியல், மகனின் சினிமா எண்ட்ரி என அவர் ட்ரெண்ட்டிங்கிலேயே இருக்கிறார். இந்நிலையில் விஜய் குறித்த மேலும் சில முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
லியோ படத்தினை முடித்த சூட்டோடு தற்போது தளபதி68ல் இணைந்து விட்டார் விஜய். இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரம் என்றும், அதில் ஒரு வேடம் ரா ஏஜெண்ட் என்று கூறப்படுகிறது. இதற்காக விஎஃப் பணிகள் இப்போதே தொடங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: ஆசையாக கேட்ட கிங்காங்… அட இதுக்கென்ன கேள்வி? அசால்ட்டு காட்டிய ஷாருக்கான்!
விஜயின் லுக் டெஸ்ட் என பல வேலைகள் இருக்க அவரை படக்குழு அலேக்காக லண்டனுக்கு அழைத்து சென்று விட்டனர். அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு விஜய் செல்கிறார். திரைக்கதை எழுதும் பணியில் வெங்கட் பிரபு படு தீவிரமாக இயங்கி வருகிறாராம். படப்பிடிப்பு கூட செப்டம்பர் கடைசியிலே தொடங்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு விஜய் 35 நாட்கள் தான் கால்ஷூட் கொடுத்து இருக்கிறாராம்.
தளபதி 69 படத்தினை இயக்க இருப்பது அட்லீ தான் இயக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் இணையத்தில் கசிந்து இருக்கிறது.ஏற்கனவே அட்லிக்கு விஜய் மூன்று படங்களை கொடுத்து இருக்கிறார். அனைத்துமே காப்பி என கலாய்க்கப்பட்டாலும் வசூல் ரீதியாக ஹிட் படங்களாகவே அமைந்தது.
இதையும் படிங்க: அங்க சுத்தி இங்க சுத்தி… ஷாருக்கான் தலையிலே கை வைத்த மீடியா… அடே எப்படி தெரிது என்னப்பாத்தா?
இந்த படங்களின் வரிசையில் விஜயின் அடுத்தடுத்த படங்களை சுதா கொங்காரா, வெற்றிமாறன் ஆகிய இருவரில் ஒருவர் இயக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இதில் சுதா கொங்காராவிடம் விஜய் ஏற்கனவே கதை கேட்டு இருப்பதாக கூட இணையத்தில் ஒரு தகவல் கசிந்தது.
வெற்றிமாறனுடன் விஜய் கூட்டணி குறித்து கேட்டபோது, இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். சரியான நேரம் வரும்போது இந்தக் கூட்டணி கண்டிப்பாக அமையும் எனத் தெரிவித்து இருக்கிறார். இதனால் விஜய் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்தாலும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்றே தெரிகிறது.