பிரசாந்துக்கு மரியாதை கொடுத்து அஜித்தை அசிங்கப்படுத்திய வைரல் புகைப்படம்!.. உண்மையில் நடந்தது என்ன?

Published on: January 16, 2024
---Advertisement---

Prasanth: தமிழ் சினிமாவில் 90ஸ்களில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தவர் பிரசாந்த். ஆனால் அவருக்கு இப்போது மார்கெட் காலியாகி விட்டது. அதே நாளில் சின்ன ஸ்டாராக இருந்த அஜித் இன்று உச்சநட்சத்திரமாக இருக்கிறார். இவங்களுக்கு ஏன் இந்த ஒப்பீடு எனக் கேட்டால் அதற்கும் காரணம் இருக்கு.

ஒரு புகைப்படம் பத்திரிக்கையில் ரிலீஸ் ஆகிறது. அதில் மாலையுடன் பிரசாந்த் நிற்க அருகில் வெறும் கழுத்துடன் தலை குனிந்து நிற்கிறார் அஜித். இது பெரிய சர்ச்சையானது. ஆனால் அது முதலில் கமலா தியேட்டர் படம் என்று சிலர் சொல்லினர். பிரசாந்த் தரப்பு தான் அது ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் பிரசாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட படம் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: என்னங்க மாயா எப்படி இருக்கீங்க? போட்டி முடிஞ்சாச்சு சண்டையை ஆரம்பிச்சிடலாமா? பிரதீப்பின் வைரல் ட்வீட்

ஆனால் அதன் உண்மையை காஜா மொய்தீன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தில் முதலில் அஜித் தான் ஓகே செய்யப்படுகிறார். அந்த படத்தில் அவரை நடிக்க வைக்க ஒரு ஷூட்டிங் சென்ற போதே தமிழே தெரியாத இயக்குனரிடம் திட்டு வாங்கி கொண்டு இருக்கிறார் அஜித். அவரை ஆனந்த பூங்காற்றே படத்தில் புக் செய்ய கேட்ட போது ஒரே பேமெண்ட்டில் 21 லட்சம் வேண்டும் எனக் கேட்டாராம்.

அதற்கும் தயாரிப்பாளர் உடனே ஓகே சொல்ல ஆனந்த பூங்காற்றேவில் ஒப்பந்தம் ஆகிறார். ஆனால், அஜித் திடீரென முதுகு பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இனி அவ்வளவு தான் அஜித் என பலர் காஜா மொய்தீனிடம் சிலர் கூறுகின்றனர். இதை தொடர்ந்து அஜித்துக்கு பதில் ஆனந்த பூங்காற்றே படத்தில் பிரசாந்த் என்று அடுத்த போஸ்டர் வெளியாகிறது. இதை பார்த்து அதிர்ந்தவர், முடியாமல் நேராக போய் கெஞ்சி கேட்டுக்கொண்டதன் பேரில் அஜித்தே பின்னர் அந்த படத்தில் நடித்து இருந்தார். 

இதை தொடர்ந்து காஜா மொய்தீன் தயாரிப்பில் ஷாஜிகணேஷ் இயக்கத்தில் ஜனா படத்தில் அஜித் நடித்து இருந்தார். அதன் பூஜையில் தான் பிரசாந்த் கலந்து கொண்டபோது தான் அவருக்கு மட்டும் மாலை அணிவிக்கப்பட்டது. புகைப்படமும் வைரலான நிலையில் அதை வைத்து அஜித்தை பலர் நிறைய தூண்டிவிட்டனர். இதனை அஜித் தனக்கு சாதமாக எடுத்து கொண்டாராம்.

இதையும் படிங்க: அயலான் படத்தில் சிவகார்த்திகேயனை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்!.. அட என்னப்பா இது!..

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.