என்னங்க மாயா எப்படி இருக்கீங்க? போட்டி முடிஞ்சாச்சு சண்டையை ஆரம்பிச்சிடலாமா? பிரதீப்பின் வைரல் ட்வீட்

by Akhilan |
என்னங்க மாயா எப்படி இருக்கீங்க? போட்டி முடிஞ்சாச்சு சண்டையை ஆரம்பிச்சிடலாமா? பிரதீப்பின் வைரல் ட்வீட்
X

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் சீசன் 7 முடிஞ்சாலும் அதில் தொடங்கிய சர்ச்சை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. தற்போது நிகழ்ச்சி முடிந்த பின்னர் இன்னும் வேட்டை அதிகமாக இருக்கும் என ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியதில் இருந்து பிரதீப் ஆண்டனிக்கு தான் நிறைய சப்போர்ட் இருந்தது. நிகழ்ச்சியை சரியாக கணித்து ஆடினார். கிட்டத்தட்ட அவருக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே சென்றனர். இது மாயாவுக்கு பெரிய பிரச்னையாக இருந்து இருக்கலாம்.

இதையும் படிங்க: அந்த படத்துல நடிச்சதுக்கு எனக்கு கிடைச்சது இதுதான்!… ஃபீலிங்ஸ் காட்டும் நாசர்..

முதல் சில வாரத்தில் பிரதீப்புடன் சின்ன பிக்பாஸ் வீட்டில் இருக்க மாட்டேன் என்றார். ஆனால் அவரின் சப்போர்ட்டை அறிந்த பின்னர் அவரை அண்ணன் எனக் கூறி கையில் முத்தம் கொடுத்து தன்னுடைய இமேஜை காப்பாற்றி கொண்டார். கிட்டத்தட்ட ஒரு டாஸ்கில் நான் வெற்றி பெற்றால் 50 லட்சத்தினை பிரதீப்புக்கே எனவும் பேசி இருந்தார்.

ஆனால் திடீரென யாருமே எதிர்பார்க்காமல் ஒரு வீக் எண்ட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சிலர் உரிமை குரல் தூக்கி பிரதீப் மீது குற்ற பத்திரிக்கை வாசித்தனர். இதில் விளக்கம் அளிக்க பிரதீப் ஆண்டனிக்கு இடம் கொடுக்கப்படாமல் இருந்தது. போட்டியாளர்களை ஒன்றின் பின் ஒருவராக உள்ளே அழைத்தார் கமல்.

ஒற்றை விரலை காட்டி தொட சொல்வது போல ரெட் கார்டை கொடுத்து உண்டா இல்லையா எனக் கேட்டார். அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் உள்ளிட்ட சிலரை தவிர மற்ற எல்லாருமே ரெட் கார்டை கொடுக்க பிரதீப் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பெரிய சர்ச்சையாகியது.

இதையும் படிங்க: விக்கிக்கு நடந்தது நமக்கும் நடந்திருமோ? ‘ஏகே 63’ க்காக பக்கா ஸ்கெட்ச் போட்டு வேலையை ஆரம்பிக்கும் ஆதிக்

தற்போது நிகழ்ச்சி முடிந்து இருக்கும் நிலையில், பிரதீப் ஆண்டனி ஹாய் மாயா, லைப்லாம் எப்படி போகுது? நீ நல்லா இருப்பனு தெரியும். என்னுடைய நட்பின் மதிப்பு 50 லட்சம். நான் அவ்வளோலாம் வொர்த் இல்லனு நீ நினைச்சா. நான் புரிஞ்சிக்கிறேன். உன்னோட விளையாண்டது நல்லா இருந்துச்சு. செக் மேட் என ட்வீட்டி இருக்கிறார்.

இதில் தங்களது பிபி வீடியோவுடன் ராக்ஸ்டார் என்ற ஒரு பாட்டையும் இணைத்து இருக்கிறார். கண்டிப்பாக இனி அடுத்தடுத்த ட்வீட்களில் நிறைய வெடி வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாயாவின் கூட்டம் என்ன சொல்லும் என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Next Story