Prasanth: தமிழ் சினிமாவில் 90ஸ்களில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தவர் பிரசாந்த். ஆனால் அவருக்கு இப்போது மார்கெட் காலியாகி விட்டது. அதே நாளில் சின்ன ஸ்டாராக இருந்த அஜித் இன்று உச்சநட்சத்திரமாக இருக்கிறார். இவங்களுக்கு ஏன் இந்த ஒப்பீடு எனக் கேட்டால் அதற்கும் காரணம் இருக்கு.
ஒரு புகைப்படம் பத்திரிக்கையில் ரிலீஸ் ஆகிறது. அதில் மாலையுடன் பிரசாந்த் நிற்க அருகில் வெறும் கழுத்துடன் தலை குனிந்து நிற்கிறார் அஜித். இது பெரிய சர்ச்சையானது. ஆனால் அது முதலில் கமலா தியேட்டர் படம் என்று சிலர் சொல்லினர். பிரசாந்த் தரப்பு தான் அது ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் பிரசாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட படம் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: என்னங்க மாயா எப்படி இருக்கீங்க? போட்டி முடிஞ்சாச்சு சண்டையை ஆரம்பிச்சிடலாமா? பிரதீப்பின் வைரல் ட்வீட்
ஆனால் அதன் உண்மையை காஜா மொய்தீன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தில் முதலில் அஜித் தான் ஓகே செய்யப்படுகிறார். அந்த படத்தில் அவரை நடிக்க வைக்க ஒரு ஷூட்டிங் சென்ற போதே தமிழே தெரியாத இயக்குனரிடம் திட்டு வாங்கி கொண்டு இருக்கிறார் அஜித். அவரை ஆனந்த பூங்காற்றே படத்தில் புக் செய்ய கேட்ட போது ஒரே பேமெண்ட்டில் 21 லட்சம் வேண்டும் எனக் கேட்டாராம்.
அதற்கும் தயாரிப்பாளர் உடனே ஓகே சொல்ல ஆனந்த பூங்காற்றேவில் ஒப்பந்தம் ஆகிறார். ஆனால், அஜித் திடீரென முதுகு பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இனி அவ்வளவு தான் அஜித் என பலர் காஜா மொய்தீனிடம் சிலர் கூறுகின்றனர். இதை தொடர்ந்து அஜித்துக்கு பதில் ஆனந்த பூங்காற்றே படத்தில் பிரசாந்த் என்று அடுத்த போஸ்டர் வெளியாகிறது. இதை பார்த்து அதிர்ந்தவர், முடியாமல் நேராக போய் கெஞ்சி கேட்டுக்கொண்டதன் பேரில் அஜித்தே பின்னர் அந்த படத்தில் நடித்து இருந்தார்.
இதை தொடர்ந்து காஜா மொய்தீன் தயாரிப்பில் ஷாஜிகணேஷ் இயக்கத்தில் ஜனா படத்தில் அஜித் நடித்து இருந்தார். அதன் பூஜையில் தான் பிரசாந்த் கலந்து கொண்டபோது தான் அவருக்கு மட்டும் மாலை அணிவிக்கப்பட்டது. புகைப்படமும் வைரலான நிலையில் அதை வைத்து அஜித்தை பலர் நிறைய தூண்டிவிட்டனர். இதனை அஜித் தனக்கு சாதமாக எடுத்து கொண்டாராம்.
இதையும் படிங்க: அயலான் படத்தில் சிவகார்த்திகேயனை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்!.. அட என்னப்பா இது!..
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…