Categories: Cinema News latest news

‘விடாமுயற்சி’யை மெகா ஹிட்டாக்க அஜித்துடன் கூட்டணி அமைக்கும் பிரபலம்!.. தரமான சம்பவம் இருக்கு!..

Vidamuyarchi: தமிழ் சினிமாவில் அஜித்தின் வளர்ச்சி ஒரு ஆச்சரியமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் பல தடைகளை கடந்து வெற்றிக்காக பல வழிகளில் போராடி வந்தவர் தான் அஜித். தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் அஜித் ரசிகர்களின் நலனுக்காக பல அறிவுரைகளை சொல்லிக் கொண்டும் வருகிறார்.

மேலும் வெளியில் தெரியாமலேயே பல நல்ல உதவிகளை செய்து கொண்டும் இருக்கிறார். துணிவு படத்தின் வெற்றி மீண்டும் அஜித்தை நோக்கி ரசிகர்களின் பார்வை திரும்பியது. அடுத்த படத்தை எப்படி கொடுக்கப் போகிறார் என்ற ஒரு ஏக்கமும் ரசிகர்களிடம் இருந்தது. அதனை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட படம்தான் விடாமுயற்சி.

Also Read

இதையும் படிங்க: அரசியல் எண்ட்ரியால் தான் இது நடக்கல.. விஜய் வைத்த தடா… கண்ட்ரோல் கண்ட்ரோல்!

பல போராட்டங்களுக்கு பிறகு இப்பொழுதுதான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்க ஆரம்பித்திருக்கிறது. முழுக்க முழுக்க துபாயில் தான் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

படத்தின் நடிகர்கள், நடிகைகளை தேர்வு செய்யும் பணியும் அவ்வப்போது நடந்து வருகிறது. ஏற்கனவே படத்தில் த்ரிஷா மற்றும் தமன்னா நடிப்பதாக கூறினார்கள். இதில் த்ரிஷா நடிப்பது உறுதி என அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்த ஒரு தகவலை இப்போது இணையத்தில் டிரெண்ட்டாக்கி வருகிறார்கள் ரசிகர்கள்.

இதையும் படிங்க: கேக் சைஸ் கூட பெரிசா இல்லையே!.. இதுதான் கிராண்ட் சக்சஸா?.. அமுல் பேபியை அழவிடும் நெட்டிசன்கள்!..

அஜித்துடன் மீண்டும் த்ரிஷா கூட்டணி அமைத்திருப்பது விடாமுயற்சி டீம்முக்கு கூடுதல் பலம் என்றும் ஏற்கனவே ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் த்ரிஷா ஜோடியாக நடித்து அந்தப் படங்களும் ஹிட் அடித்திருக்கின்றன. இது ஐந்தாவது  முறையாக அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேரும் படமாகும்.

அதனால் இந்த கெமிஸ்ட்ரி கண்டிப்பாக வொர்க் அவுட் ஆகும் என்றும் அஜித்துக்கு பொதுவாக செண்டிமெண்ட் செட் ஆகும் என்பதால் இந்த விடாமுயற்சி படம் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: ஒரு டிக்கெட்டுக்கு 23 படம் காட்டுறாரு!. ஏன் அட்லியை திட்றீங்க!?.. ட்ரோல் ஆகும் வைரல் வீடியோ!..

Published by
Rohini