நிஜமாவே அஜித்தும் விஜய்யும் ஃப்ரெண்ட்ஸ்தானா?... ஏன் இவுங்க ரெண்டு பேரும் இப்படி இருக்குறாங்க!!
ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகியோர் போட்டி நடிகர்களாக திகழ்ந்து வந்தாலும் அவர்களுக்குள் மிக நெருங்கிய நட்பு உண்டு. இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 16 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளனர்.
இருவரும் தனி தனியாக நடிக்கத் தொடங்கிய பிறகும் கூட அடிக்கடி சந்திப்பதும் தொலைப்பேசியில் பேசிக்கொள்வதும் என இவர்களின் நட்பு இன்னும் நெருக்கமாகத்தான் ஆனது. குறிப்பாக ரஜினிகாந்த்தின் வளர்ச்சியில் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய பங்குண்டு.
“தளபதி” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த்தின் நடிப்பு மணி ரத்னத்திற்கு திருப்தியளிக்கவில்லை. அப்போது ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு தொடர்பு கொண்டு தனது நிலையை கூற, அதன் பின் கமல்ஹாசன் அவருக்கு சில டிப்ஸ்களை கூறினாராம். இது குறித்து ரஜினிகாந்த்தே “பொன்னியின் செல்வன்” ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.
மேலும் “படையப்பா” திரைப்படத்தின் Footage-ன் நீளம் நான்கு மணி நேரம் வரை இருக்க, “எந்த காட்சியையும் நீக்காமல் அப்படியே வெளியிடுவோம், இரண்டு இடைவேளைகள் விடுவோம்” என கூறினாராம் ரஜினிகாந்த். இந்த விஷயத்தை கே.எஸ்.ரவிக்குமார் கமல்ஹாசனிடம் கூற, கமல்ஹாசன் ரஜினிக்கு தொடர்புகொண்டு, “ஒரு திரைப்படத்தை நான்கு மணி நேரம் தொடர்ந்து யாரும் பார்க்கமாட்டார்கள். ஹாலிவுட்டில் கூட இப்படி ஒரு முயற்சி எடுத்ததில்லை. ஆதலால் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்” என கூறினாராம். அதன் பிறகுதான் “படையப்பா” திரைப்படத்தின் நீளம் மூன்று மணி நேரமாக குறைக்கப்பட்டதாம்.
இவ்வாறு கமல்ஹாசன்-ரஜினிகாந்த் ஆகிய இருவருக்குள்ளும் நல்ல புரிதலும், மிக நெருங்கிய நட்பும் உண்டு. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர் “அஜித்தும் விஜய்யும் நல்ல நண்பர்களா? இருவரும் நல்ல நண்பர்கள் என்றால் ரஜினி-கமல் போன்று அடிக்கடி பேசிக்கொள்வார்களா?” என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: விஷாலுக்கு ஏற்பட்ட இப்படி ஒரு அவல நிலைக்கு என்ன காரணம் தெரியுமா?? பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்…
அதற்கு சித்ரா லட்சுமணன் “கமல்ஹாசனுக்கும் ரஜினிக்கும் உள்ள நட்போடு, விஜய்க்கும் அஜித்துக்கும் உள்ள நட்பை ஒப்பிட முடியாது. ரஜினியும் கமலும் நல்ல நண்பர்கள், இருவரும் அடிக்கடி தொலைப்பேசியில் பேசிக்கொள்வார்கள். இவர் அவரை போய் பார்ப்பார், அவர் இவரை போய் பார்ப்பார். ஆனால் விஜய், அஜித் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையோ சந்தித்தாலே அது அபூர்வம்.
எதாவது விழா நிகழ்ச்சிகளில் தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் வேண்டுமானால் நேருக்கு நேரா பாத்துக்குவாங்களே தவிர, ஆர்வத்தோடு ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வதில்லை” என பதிலளித்திருந்தார்.