Categories: Cinema History Cinema News latest news

நோ சொன்ன அஜித்… விஜய்க்காக எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்… அப்போவே அப்படியா?

Ajith-Vijay: கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் இருவரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ராஜ பார்வை தான். அப்படத்தில் நடிக்கும் அஜித்தும், விஜயும் நடந்து கொண்டது குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜானகி செளந்தர் இயக்கிய திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. இப்படத்தில் அஜித்குமார், விஜய், இந்திரஜா உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் விஜய் மீது காதல் கொள்வார் நடிகை இந்திரஜா. ஆனால் அவரை எப்போதுமே தள்ளி வைப்பார் விஜய்.

இதையும் படிங்க: ஈஸ்வரிக்கு எதிராக குழந்தை விஷயத்தில் முடிவெடுத்த ராதிகா… சிக்கிதவிக்க போகும் கோபி!…

அதற்கு காரணம் கேட்ட போது, தன்னுடைய நண்பர் அஜித் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், பின்னர் ஜோடிகளை பிரித்து காதலியை வேறு திருமணம் செய்து வைத்து விட்டதால் அஜித் தற்கொலை செய்து கொள்வார். இதனால் இப்படத்தில் விஜயே முன்னணி கதாபாத்திரமாக இருந்தார்.

அதனால் இப்படத்தில் நடித்ததற்கு அஜித் சம்பளமே வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். ஆனால் விஜயிற்கு கேட்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் இளையராஜா இசையமைக்க வேண்டும் என கண்டிஷன் போட்டாராம். அதை தொடர்ந்து இளையராஜாவை இந்த படத்தில் புக் செய்தனர்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை வச்சு படம் பண்ணா பிஎம்டபுள்யூ காரா? போஸ்ட் போட்டு ஷாக் கொடுத்த இயக்குனர்

இதை தொடர்ந்து அவர் இசையமைப்பில் இந்த படம் வெளியானது. ஆனால் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என படத்தின் தயாரிப்பாளர் செளந்தர பாண்டியன் தெரிவித்துள்ளார். இவரின் நெருங்கிய நண்பர்கள் விஜயும், அஜித்தும் என்பதால் அப்போது அந்த விஷயம் எளிதாக நடந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
Akhilan