ஓடுன ஒரே படம் மங்காத்தா.. ஓடுன ஒரே படம் துப்பாக்கி.. என்னங்கடா நடக்குது இங்க..!!
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இரு பெரும் தலைகள் என்றால் அது அஜித்தும், விஜய்யும். இவர்கள் நடிக்கும் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய வெற்றியடைவது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது.
இவர்கள் இருவரும் பொதுவெளியில் நண்பர்களாகவே நடந்துகொள்கின்றனர். ஆனால், இவர்களது ரசிகர்கள் பொதுவெளியிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி ஒருவரை ஒருவர் மட்டமாக விமர்சனம் செய்து அடித்துக்கொள்கின்றனர்.
பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். இதில் தல - தளபதி ரசிகர்களைப்பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. எதெற்கெடுத்தாலும் சண்டைபோடுவதுதான் இவர்களது வேலை..
அப்படித்தான் இன்றும் ட்விட்டர் பக்கம் ரணகளமாக உள்ளது. மங்காத்தாவுக்கு பின் நான் நடித்த எந்தப்படமும் ஹிட்டாகவில்லை. எங்கேயோ தப்பு நடக்கிறது. அதை கண்டுபிடியுங்கள் என்று தனது அடிப்பொடிகளுக்கு அஜித் கோரியதாக பிரபல தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.
இதை வைத்து விஜய் ரசிகர்கள் #ஓடுனஒரேபடம்மங்காத்தா என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து அஜித்தைப்பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் ரசிகர்கள் #ஓடுனஒரேபடம்துப்பாக்கி என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக ஒரு பேட்டியில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் 'துப்பாக்கி திரைப்படத்திற்கு பின் இன்றுவரை நல்ல திரைக்கதை விஜய்க்கு அமையவில்லை' என பேசியிருந்தார். அதை வைத்து அஜித் ரசிகர்கள் #ஓடுனஒரேபடம்துப்பாக்கி என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இவர்கள் இப்படி சண்டைபோடுவதை பார்த்து சினிமா ரசிகர்கள் என்னங்கடா நடக்குது இங்க. இப்போதான் நீங்க திருந்த போகிறீர்கள் என கூறி வருகின்றனர்.