அஜித்துக்கு எப்படி மங்காத்தா படமோ அதே போல விஜய் சேதுபதிக்கு மகாராஜா!.. விஜய் நிலைமை தான் மோசம்!..

Published on: June 15, 2024
---Advertisement---

பொதுவாகவே நடிகர்களுக்கு தங்களது 25-வது, 50-ஆவது மற்றும் 100-வது படங்கள் எல்லாம் மைல் ஸ்டோன் படங்களாக இருக்க வேண்டும் என்கிற விருப்பம் அதிகமாகவே இருக்கும். ஒரு சில நடிகர்களுக்கு அது சூப்பர் ஹிட் படங்களாக அமைந்து விடும். ஆனால் ஒரு சிலருக்கு மைல் ஸ்டோன் படங்களும் சொதப்பும் நிலை உருவாகும்.

நடிகர் அஜித்குமாருக்கு மங்காத்தா படம் 50வது படமாக வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, பிரேம்ஜி, அஞ்சலி, மகத், அஸ்வின் உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் தாறுமாறாக ஹிட் அடித்தன.

இதையும் படிங்க: பாராட்டு கிடைச்ச அளவுக்கு பாக்ஸ் ஆபிஸ் நிரம்புச்சா?.. மகாராஜா முதல் நாள் வசூல் எவ்வளவு?..

அதேபோல தற்போது விஜய் சேதுபதிக்கு 50-ஆவது படமாக உருவாகியுள்ள மகாராஜா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக மாறி உள்ளது. படத்திற்கு முதல் நாள் வசூல் நல்ல ஓப்பனிங்கை கொடுத்துள்ள நிலையில், முதல் நான்கு நாட்களில் படம் பெரிய அளவில் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தளபதி விஜய்க்கு 50வது படமாக வெளியான சுறா திரைப்படம் சூர மொக்கை படமாக அமைந்தது. எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான அந்த படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையவில்லை. தற்போது சோசியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள் இதைக் குறிப்பிட்டு நடிகர் விஜய்யை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் முருங்கை மரத்துல வேதாளமாக ஏறிய அஜித்!.. விடாமுயற்சி இந்த முறையாவது ஸ்டார்ட் ஆகுமா?..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 50வது படம் டைகர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அதே போல அவர் நடித்த 100வது படம் ராகவேந்திரா. 150வது படம் தான் படையப்பா. மைல் ஸ்டோன் படங்கள் சில சமயம் மிஸ் ஆனாலும், பெரிய பிளாக்பஸ்டர் படங்கள் மற்றும் அதிக வசூல் வேட்டை படங்களை முன்னணி நடிகர்கள் கொடுக்க தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது பலரது உழைப்பு கொட்டிக் கிடப்பதால் வெற்றி தோல்வி எல்லாம் சகஜமான ஒன்று தான் என விஜய் ரசிகர்கள் அஜித்துக்கு 50வது படத்துக்கு பிறகு வெளியான பல படங்கள் ஃபிளாப். ஆனால், விஜய்க்கு அதற்கு பிறகு வெளியான பல படங்கள் வெற்றி பெற்றுள்ளதாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நாகேஷ் சொன்ன ஒரு வார்த்தை! அதோட அர்த்தம் புரிய 6 வருஷம் ஆச்சு.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.