இதுதான் பிரேக்கிங்.. அஜித்தை இயக்க போகும் முருகதாஸ்.! அதுவும் யார் தயாரிப்பில் தெரியுமா.?!
அஜித் தற்போது அவரது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினைஇயக்குனர் H.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தை தெடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது 62வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் தொடங்கும் என கூறப்படுகிறது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் 63வது திரைப்பட தகவல் தற்போது இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. ஆனால்,அது யாரும் எதிர்பாரா கூட்டணி. தீனா படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் என்பது தான் அந்த தகவல்.
இதையும் படியுங்களேன் - உங்களை உள்ளாடையில் பார்க்க முடியுமா.? மாஸ்டர் நடிகையின் மாஸ் ரீப்ளே.. போட்டோவால் ஆடிப்போன ரசிகர்கள்...
மேலும், இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை ஆனால் அப்படி நடந்தால், நிச்சயம் முருகதாஸ் மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வர கடுமையாக உழைத்து படத்தை கண்டிப்பாக வெற்றியடைய செய்வார் என கூறப்படுகிறது.