Cinema History
அஜித் என்னை ஃபீல் பண்ணி கட்டிப்பிடிக்க சொன்னார்… காதல் மன்னன் திலோத்தமா ஷாக்!
Kadhal Mannan Thilothama: தமிழ் சினிமாவில் அஜித்துக்கே ஒரு பெரிய இடத்தினை கொடுத்த படம் தான் காதல் மன்னன். ஹீரோவுக்கு மட்டுமல்லாமல் ஹீரோயின் திலோத்தமாவிற்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அந்த படத்துடன் அவர் தமிழ் சினிமாவில் இருந்து விலகினார்.
தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் காதல் மன்னன் படம் குறித்தும் அவர் பல சுவாரஸ்ய தகவலை தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அதிலிருந்து, காதல் மன்னன் படத்துக்கு நாயகியை விறுவிறுப்பாக தேடி வந்தனர். அப்போது இப்படி ஒரு கண், லுக்கில் நாயகி வேணும் என என் அக்காவிடம் கேட்டார்கள்.
இதையும் படிங்க: காஷ்மீர்ல அந்த ஹைனா சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா?.. லோகேஷ் கனகராஜ் இவ்ளோ ரிஸ்க் எடுத்தாரா?..
எனக்கு தமிழ் மொழியே தெரியாது. விவேக் இது ஒரு டான்ஸ் படம். நீங்க கோரியோ பண்ணுங்க, அவங்க நடிக்கட்டும் என லாக் வைத்தார். தப்பா இல்லனாலும் என்னை கட்டாயப்படுத்தியே இந்த படத்தில நடிக்க வச்சாங்க. 6 மாதம் என்னை ஃபாலோ செய்தே இந்த படத்தில நடிக்க ஓகே வாங்குனாங்க. ஆனா இப்போ அவருக்கு நான் நன்றி சொல்லணும்.
காதல் மன்னனில் நான் நடிக்கும் போது எனக்கு 16 வயது தான். மொழியும் தெரியாது. என்னோட முதல் ஷாட் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் நடித்தேன். ஆனா முதல் ஷாட் சரியாக அமையவில்லை. என்னுடைய முடியை கேமராவில் பார்த்து சரி செய்து பல்ப் வாங்கினேன். காதல் மன்னன் திரைப்படத்தினை நான் இதுவரை பார்க்கவே இல்லை. யாரிடம் வேணாலும் கேளுங்கள்.
இதையும் படிங்க: தலைவர் 171-ல் இதையெல்லாம் செய்ய போறேன்!.. லோகேஷ் சொன்ன செம சர்ப்பரைஸ்!..
அந்த படத்தில் நான் ஒரு பொம்மை தான். ஒரு சின்ன சிரிப்பை கூட சரண் தான் இயக்கினார். அவர் சொன்னதை அப்படியே செய்தேன். திலோத்தமாவை உருவாக்கியது அவர் தான். இந்த படத்தில் ரொமாண்ட்டிக் பாட்டு வைக்கணும் என முடிவெடுத்தனர். ஆனால் சரணுக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இருந்தும் என்னிடம் வந்து ஒரு ரொமாண்ட்டிக் சீன் மட்டும் இருக்கு. நீங்க அஜித்தை கட்டுப்பிடிக்கணும் என்றார். நான் ஓகே சொல்லிவிட்டேன்.
ஆனால் படப்பிடிப்பு வந்த போது என்னால் செய்யவே முடியவில்லை. படபடப்பாக வந்து விட்டது. என்னை அஜித் அழைத்து நான் நல்லா தான இருக்கேன். லவ்வை ஃபீல் பண்ணு. அழகா தானே இருக்கேன் என சொன்னார். ஆனால் எனக்கு கடைசி வரை அவரை கட்டிப்பிடிக்க வரவே இல்லை. கடைசியில் காதல் மன்னன் டீம் தான் அதை அப்படி இப்படி சமாளித்து படப்பிடிப்பை முடித்தனர் என்றார்.