வாங்க படம் பண்ணுவோம்னு சொன்னார்!.. ஆனா மனுசனை பார்க்கவே முடியல!.. அஜித் பற்றி புலம்பும் இயக்குனர்…

Published on: March 20, 2024
ajith
---Advertisement---

இயக்குனர் பவித்ரன் மற்றும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ஏ.வெங்கடேசன். ஷங்கரின் இயக்கத்தில் காதலன் படத்தில் வேலை செய்து வந்தபோது அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அப்படி உருவான திரைப்படம்தான் மகாபிரபு. இதில், சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதன்பின் செல்வா, பூப்பரிக்க வருகிறோம், சாக்லேட், தம், குத்து, சாணக்யா, வாத்தியார், துரை, மலை மலை, மாஞ்சா வேலு, வாடா, வள்ளிக்கோட்டை உள்ளிட்ட சில படங்களை இயக்கி இருக்கிறார். விஜயை வைத்து நிலவே வா, பகவதி ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித் ஒரு சுயநலவாதி!. பெருசா உதவிலாம் பண்ணது கிடையாது!.. காமெடி நடிகர் பேட்டி…

இவரின் இயக்கத்தில் அதிகமான படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரத்குமார்தான். ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கினார். வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த அங்காடித்தெரு படத்தில் சூப்பர்வசைராக வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கியவர் இவர்தான். அதன்பின் பல படங்களிலும் நடித்துவிட்டார்.

a venkatesh

இவர் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘நான் சாணக்யா படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதரபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் இருந்தபோது அங்கு அஜித்தின் வரலாறு படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. அப்போது அஜித்திடம் சரத்குமார் என்னை அறிமுகம் செய்து வைத்து ‘வெங்கடேசுடன் ஒரு படம் பண்ணுங்க’ என்றார்.

இதையும் படிங்க: இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா?.. மஞ்சு வாரியரின் திடீர் மாற்றம்!.. எல்லாம் அஜித் பார்த்த வேலை!

அஜித்தும் என்னிடம் ‘சரத் சார் சொல்லியிருக்கிறார். கண்டிப்பாக நாம் சேர்ந்து ஒரு படம் செய்வோம். சென்னை வந்தபின் என்னை வந்து பாருங்க’ என சொன்னார். நானும் சென்னை வந்தபின் அவரின் மேனேஜருக்கு 4 முறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன். எந்த ரெஸ்பான்சும் இல்லை.

அதன்பின் போன் பண்ணுவதை நிறுத்துவிட்டேன். அவரை தொந்தரவு செய்கிறோமே என தோன்றியது. விருப்பம் இருந்தால் அவர்களே பேசுவார்கள் என நினைத்து விட்டுவிட்டேன்’ என ஏ.வெங்கடேஷ் கூறினார்.

இதையும் படிங்க: ஷூட்டிங் அப்புறம் பாப்போம்!.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்!.. ஃபோட்டோ பாருங்க!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.