Cinema News
Ajith: இத்தனை சர்ஜரி செய்தும் அஜித்தின் உடல் ஆரோக்கியத்துக்கு காரணம்.. சுப்ரீம் சுந்தர் கூறிய தகவல்
Ajith: என் வெற்றிக்கு எனக்கு பின்னால் இருக்கும் பல வலிகள் தான் காரணம் என அஜித் ஒருமுறை கூறியிருப்பார். அந்தளவுக்கு அஜித் அவருடைய ரேஸில் ஏகப்பட்ட விபத்துக்களை சந்தித்து பல ஆப்ரேஷன்கள் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட சர்ஜரிகளை அஜித் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதுதான் பல பிரபலங்கள் ஆச்சரியமாக கூறிய தகவலாக இருக்கும்.
பல முறை சர்ஜரி: இத்தனை ஆப்ரேஷன் செய்தும் அஜித் மீண்டும் அதே தன்னம்பிக்கையுடன் சினிமாவில் டிராவல் செய்து வருகிறார் என பெருமையாக பேசியிருக்கின்றனர். சினிமாவில் அவருக்கான இலக்கை அடையும் வரை சினிமாவில்தான் கவனம் செலுத்தி வந்தார். அதனால் கார் ரேஸுக்கு ரெஸ்ட் கொடுத்திருந்தார். மீண்டும் அவருடைய பேஷனான கார் ரேஸை தொடங்க இருக்கிறார்.
இதையும் படிங்க: NEEK: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ்!… காதலர்களை குறி வைத்து தனுஷ் போடும் பக்கா பிளான்?!…
துபாயில் நடக்கவுள்ள பார்முலா கார் ரேஸில் அஜித்தும் கலந்து கொள்ள இருக்கிறார். அதற்கான பயிற்சிகளைத்தான் தற்போது எடுத்து வருகிறார் அஜித். பொதுவாக சினிமாவில் ஒரு நடிகரை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நடிகருக்கு எதுவும் ஆகக் கூடாது என படம் ரிலீஸ் ஆகும் வரை வேண்டிக் கொள்வார்கள். ஏனெனில் பல வகைகளில் வட்டிக்கு பல கோடிகளை கடனாக பெறும் பட்சத்தில் திடீரென அந்த நடிகருக்கு ஏதாவது ஆகிவிட்டால் பெரிதும் பாதிக்கப்படுவது தயாரிப்பாளராகத்தான் இருக்க முடியும்.
விபத்து ஏற்பட்டால்?: இதில் அஜித்தும் விதிவிலக்கு அல்ல. கார் ரேஸில் எதும் அசாம்பாவிதம் ஏற்பட்டால் என்னாகும் என பிரபல சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் அஜித்திடம் ஒரு முறை கேட்டிருக்கிறார். அதற்கு அஜித் 90 சதவீதம் ஒன்னும் ஆகாது. மீதம் 10 சதவீதம்தான் இயற்கையால் ஏற்படும் விபத்தாகும். அதாவது தீடீரென கார் ஸ்கிட் ஆகிவிடலாம். டயர் தீப்பிடிக்கலாம். இப்படித்தான் விபத்து ஏற்படும்.
இதையும் படிங்க: K.Balachander: நடிகரின் நம்பிக்கையைப் பொய்யாக்கிய பாலசந்தர்… யார்…? என்ன படம்னு தெரியுமா?
மற்றபடி எனக்கு ஒன்னும் ஆகாது. நீங்க வேண்டுமென்றால் வேண்டிக் கொள்ளுங்கள்.உங்கள மாதிரி நல்லவங்க என்ன சுத்தி இருக்கும் போது எனக்கு ஒன்னும் ஆகாது. மேலும் கடவுளும் என்னை கைவிட மாட்டார் என்று கூறினாராம் அஜித்.மேலும் ஒவ்வொரு முறையும் பந்தயத்திற்கு போகும் முன்பு முறையான பயிற்சிகளை எடுத்துவிட்டுத்தான் போகிறேன். அதனால் பெரிய அளவில் ஒன்னும் ஆகாது என்று அஜித் கூறினாராம்.