Connect with us
ajith

Cinema News

விஜயுடன் கூட்டணினு சொன்னதும் அஜித்திடம் இருந்து வந்த கால்! வெங்கட் பிரபு பகிர்ந்த சீக்ரெட்

வெங்கட் பிரபு அடுத்ததாக விஜயை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். விஜயின் 68 ஆவது படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் அமைய இருக்கிறது. தற்போது லியோ படத்தின் ரிலிஸ் வேலைகள் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கையில் வெங்கட் பிரபுவின் தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் ரகசியமாக மூடி வைக்கப்பட்டிருக்கின்றன.

அவ்வப்போது ஆர்வக்கோளாறில் வாய் திறந்த வெங்கட் பிரபுவை விஜய் அழைத்து கண்டித்ததாக சில செய்திகள் வெளியாகின. அதிலிருந்து வெங்கட் பிரபு தளபதி 68 படத்தைப் பற்றிய எந்த ஒரு தகவலையும் பொது இடங்களில் கூறாமல் இருந்தார்.

இந்த நிலையில் இன்று ஒரு விழாவிற்கு வந்த வெங்கட் பிரபுவை சுற்றி வளைத்துக் கொண்டனர் மீடியாக்கள். படம் எந்த நிலைமையில் இருக்கிறது கதையை எழுதி முடித்து விட்டீர்களா என கேட்க ஸ்கிரிப்ட் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன லியோ படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் தளபதி 68 படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு செட்யூல் எல்லாம் முடிந்து செப்டம்பர் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிவித்தார்.

மேலும் படம் எந்த மாதிரியான கதையாக இருக்கும் ஏனெனில் விஜய் நடிக்கும் படம் என்பதால் எப்படி எதிர்பார்க்கலாம் என ஒரு நிருபர் கேட்க அது வெங்கட் பிரபுவின் படமாக தான் இருக்கும் என கூறினார். மேலும் இந்த படத்தை பற்றி அஜித் எதுவும் சொன்னாரா என இன்னொரு நிருபர் கேட்க இந்த படம் புக் ஆனதும் முதன் முதலில் எனக்கு போன் செய்து வாழ்த்து சொன்னவரே அஜித்தான் என வெங்கட் பிரபு கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top