ஷாலினி சொன்ன ஒரு வார்த்தை!.. முரட்டு கோபக்காரரான அஜித் சாதுவாக மாறிய அந்த சம்பவம்!.

Published on: December 6, 2023
ajithkumar
---Advertisement---

Ajithkumar: தமிழ் சினிமாவில் தல என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார். இவர் பல்வேறு வெற்றித்திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாய் தற்போது வளர்ந்துள்ளார். இவர் நடித்த முதல் திரைப்படம் அமராவதி. இப்படத்தின்போது இவர் அந்த அளவுக்கு மக்களால் பேசப்படவில்லை.

இதன்பின் இவர் நடிப்பில் வெளியான காதல் கோட்டை திரைப்படத்தின் மூலம் இவர் மக்களிடையே பிரபலமானார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு பின் அஜித் பல இயக்குனர்கள் விரும்பும் ஒரு நடிகராக மாறினார்.

இதையும் வாசிங்க:இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு!. அலைபாயுதே ஸ்டைலில் பிட்டு போட்டு ஷாலினியை கவுத்த அஜித்…

இவர் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் அமர்க்களம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருந்தார். இப்படமே இவர்களின் காதலுக்கு ஆரம்ப புள்ளியாய் அமைந்தது. இப்படி காதலில் ஆரம்பித்த இவர்கள் இறுதியில் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர்.

அஜித் என்றாலே சாது என்பது நமக்கு தெரியும். ஆனால் இப்போது இப்படி சாதுவாக இருக்கும் அஜித் ஒரு காலத்தில் எந்தவொரு விஷயமானாலும் கோபப்படுபவராம். படபிடிப்பில் கூட யாரும் நடிக்க வரவில்லையென்றால் அவருக்கு பதில் வேறு நடிகரை போட்டு படத்தை முடிப்போம் என கத்துவாராம். இப்படி இருந்த அஜித் பின்னர் சாதுவாக மாறியதற்கு காரணமே நடிகை ஷாலினிதானாம்.

இதையும் வாசிங்க:ஆசையாக வாய்ப்பு கேட்ட ரஜினி.. கைய விரிச்ச பாரதிராஜா.. கடைசியில நடந்தது இதுதான்!…

ஒரு முறை அட்டகாசம் திரைப்படம் நடித்து முடித்துவிட்டு அஜித் அப்படத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் மிகவும் டென்ஷனோடு சுற்றி கொண்டிருந்தாராம். அப்போது ஒரு நாள் ஷாலினி அஜித்தை கூப்பிட்டு என்ன பிரச்சினை என விசாரிக்க அஜித்தும் அப்படத்தை நினைத்துதான் இப்படி உள்ளதாய் கூறியுள்ளார். உடனே ஷாலினி படத்தில் நடித்து முடித்து விட்டீர்கள்… டப்பிங் பேசும்போதும் அது நன்றாகதான் வந்துள்ளது.

இனி படத்தின் வெற்றியை அந்த கடவுளும் மக்களும் தீர்மானித்து கொள்வர். படக்கதை பிடித்து நீங்கள் நடித்தும் கொடுத்து விட்டீர்கள்… இனி அவர்கள் பார்த்து கொள்ளட்டும் என கூறினாராம். இதை கேட்ட அஜித்துக்கு மிகவும் ஆறுதலாக இருந்துள்ளது. அதிலிருந்து தான் எந்த படத்தில் நடித்தாலும் அது வெற்றி பெறுகிறதா இல்லையா என்பது பற்றி அஜித் கவலையே படமாட்டாராம். இப்படிதான் கோபத்தை அள்ளி வீசிய அஜித் சாந்தமான மனிதராக மாறினாராம்.

இதையும் வாசிங்க:நடிகரை திருமணம் செய்தாரா கனகா?.. சொந்த தாயே சூனியம் வச்ச கதையா போச்சே!.. அடக்கொடுமையே!..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.