Connect with us
rajinikanth

Cinema History

ஆசையாக வாய்ப்பு கேட்ட ரஜினி.. கைய விரிச்ச பாரதிராஜா.. கடைசியில நடந்தது இதுதான்!…

Rajinikjanth: தமிழ் சினிமாவில் வில்லனாய் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக மாறியவர் நடிகர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் தொடங்கி பல திரைப்படங்களிலும் வில்லன் மற்றும் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு அமைந்த திரைப்படம்தான் பைரவி.

இத்திரைப்படத்திற்கு பின் ரஜினிக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன. இவர் நடித்த நினைத்தாலே இனிக்கும், பில்லா, பொல்லாதவன் போன்ற திரைப்படங்கள் இவருக்கென ஒரு அந்தஸ்தை பெற்று தந்தன.

இதையும் வாசிங்க:பட்ஜெட் தாண்டி போன எஸ்.கே 21!.. கமலின் தலையில் விழுந்த இடி!. இந்த படத்திலயும் சம்பளம் போச்சா?!..

மேலும் இவர் நடிப்பில் வெளியான முத்து, பாட்ஷா, அண்ணாமலை,படையப்பா, சந்திரமுகி போன்ற திரைப்படங்களின் மூலம் இவர் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் இவரது வாழ்வில் மிகப்பெரிய சாதனையை படைத்த படமாக அமைந்தது.

இப்படத்தை தொடர்ந்து தனது 170வது திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் டி.ஜே.ஞானவேல்ராஜா இயக்கிவருகிறார். இதனை தொடர்ந்து இவர் தனது 171வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ரஜினிக்கு சினிமாவில் ஆரம்பத்தில் நடித்த போது பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் எனும் ஆசை இருந்ததாம். ஏனெனில் பதினாறு வயதினிலே படத்திற்கு பின் அவர் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கவில்லை.

இதையும் வாசிங்க:கேப்டன் செஞ்ச உதவிக்கு இப்படியா விசுவாசத்தை காட்டுவீங்க?… விஜயை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

ஒருமுறை பாரதிராஜாவை சந்தித்து அவரது ஆசையை கூறியுள்ளார். பாரதிராஜாவோ ‘நீ இப்போது முன்னணி கதாநாயகன். உனக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை ’என கூறிவிட்டாராம்.ஆனால் அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த அவரது சட்டையில் இருந்த 5 ரூபாயை எடுத்து ‘இதையே என் சம்பளமாக வைத்து கொள்கிறேன்.

பாக்கியை படம் ரிலீஸ் ஆன பின் வாங்கி கொள்கிறேன்’ என கூறிவிட்டாராம். அப்படி உருவான திரைப்படம்தான் கொடி பறக்குது. இப்படம் வெளியான பின் வந்த கலெக்‌ஷனில் ரஜினியின் சம்பளமாக 30 லட்சம் ரூபாயை பாரதிராஜா ரஜினியிடம் கொடுத்தாராம். ஆனால் ரஜினி அதில் 20 லட்சத்தை மட்டும் எடுத்து கொண்டு மிச்சத்தை பாரதிராஜாவிடமே கொடுத்துவிட்டாராம்.

இதையும் வாசிங்க:விஜயகாந்திடம் ஜானகி அம்மாள் காட்டிய அன்பு!.. கேப்டனுக்கு அவர் கொடுத்த பரிசுதான் ஹைலைட்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top