Connect with us
kamal

Cinema News

பட்ஜெட் தாண்டி போன எஸ்.கே 21!.. கமலின் தலையில் விழுந்த இடி!. இந்த படத்திலயும் சம்பளம் போச்சா?!..

விக்ரம் ஹிட்டுக்கு பின்னர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் இளம் நடிகர்களை வைத்து புதிய படங்களை தயாரிக்க முடிவெடுத்தார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒரு படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மற்றொரு படம் என இரண்டு படங்களை துவங்கினார்.

ஆனால், இரண்டிலுமே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களின் அறிவிப்பும் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. இதில் சிம்பு படம் இன்னும் துவங்கவே இல்லை. இப்போதுதான் சிம்பு இப்படத்திற்காக உடற்பயிற்சி செய்து வருகிறார். அதோடு, ஐசரி கணேசனோடு பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளதால் இதனால் தனது படத்திற்கு பிரச்சனை வரும் என கமல் நினைக்கிறார்.

இதையும் படிங்க: 25வது படத்தில் சறுக்கிய நடிகர்களும், சாதித்த நடிகர்களும்!.. அட இவரும் லிஸ்ட்ல இருக்காரா!…

ஒருபக்கம், சிவகார்த்திகேயனின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்கியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார். படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக படப்பிடிப்பு மூட்டையை கட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டது.

sk21

அதன்பின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. ஆனால், இப்போதே சொன்ன பட்ஜெட்டை விட 25 கோடி அதிகமாக செலவாகிவிட்டதாம். இந்த படத்தை கமல் சோனி லிவ் நிறுவனத்தோடு இணைந்துதான் தயாரித்தார். எனவே, அந்த 25 கோடியை நீங்கள் கொடுங்கள் என கமல் கேட்க, அவர்களோ ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறதோ அதுதான். நாங்கள் பணம் தரமாட்டோம் என சொல்லிவிட கமல் கடுப்பாகி இருக்கிறாராம்.

இதையும் படிங்க: கழட்டிவிட்ட கமல்!. ஹிட் படத்தின் பார்ட் டூ எடுக்க போகும் ஹெச்.வினோத்?!. ஹீரோ அவரா?!.

எனவே, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனரின் சம்பளத்தில் கைவைக்க கமல் முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ரூ.100 கோடி வரை கடனில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும்போது பஞ்சாயத்து நடந்து அதன்பின்னரே படம் வெளியாகி வருகிறது.

இந்த படத்தில் கமலும் கை வைத்து, கடன் பிரச்சனையும் சட்டையை பிடித்தால் கைக்கு ஒன்னும் வராது என புலம்பி வருகிறாராம் சிவகார்த்திகேயன். ஒருபக்கம், துவங்கிய 2 படங்களிலும் இவ்வளவு பிரச்சனையா என அப்செட் ஆகியிருக்கிறாராம் கமல்ஹாசன்.

இதையும் படிங்க: வாடிவாசலில் அஜித் நடிக்க வாய்ப்பே இல்லை!.. புள்ளி விபரத்தோடு புட்டுவைக்கும் பிரபலம்..

 

google news
Continue Reading

More in Cinema News

To Top