அஜித் கொடுத்த அதிர்ச்சி!... அரண்டு போன வலிமை பட இயக்குனர்....

நடிகர் அஜித் தான் நடிக்கும் திரைப்படங்களின் கதையை விட இயக்குனரைத்தான் பெரிதும் நம்புவார். முழுக்கதையெல்லாம் கேட்க மாட்டார். ஒரு வரிக்கதை மற்றும் கதையின் முக்கிய அம்சங்களை 10 நிமிடம் கேட்பார் அவ்வளவுதான்...சரி பண்ணுவோம். ரெடி பண்ணுங்க’எனக்கூறி விடுவார். அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் அப்படித்தான். சிறுத்தை சிவா இயக்கத்தில் கூட 4 திரைப்படங்கள் தொடர்ந்து அப்படித்தான் நடித்தார்.
திரைத்துரையில் பலரும் இது பற்றி பேச இது அஜித்தின் கவனத்திற்கு சென்றதா என தெரியவில்லை. தற்போது அவரிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வலிமை பட இயக்குனர் வினோத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ajith
வினோத் இயக்கத்தில் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் அஜித். அப்படம் மூலம் அவர் மீது நம்பிக்கை வர, அடுத்து அவரின் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்தார். அதோடு, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கே வழங்கியுள்ளார் அஜித். இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.
சமீபத்தில் வினோத்தை வரவழைத்து அடுத்த படத்தின் கதை பற்றி ஆலோசனை செய்துள்ளார் அஜித். வழக்கம் போல் 10 நிமிடம் ம்ட்டும் வினோத் கதை கூற, எனக்கு முழுக்கதையும் கூறுங்கள் என கூறினாரம் அஜித். எனவே, 2 மணி நேரம் கதையை கூறியுள்ளார் வினோத். கதையை ரசித்து கேட்ட அஜித், முடிவில், இந்த கதை வேண்டாம் வேறு கதை பண்ணுங்க எனக் கூறிவிட்டு சென்றுவிட்டாராம் அஜித்.

h vinoth
இதனால் அதிர்ச்சி ஆன வினோத், தனது உதவியாளர்களுடன் அமர்ந்து புது கதையை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளாராம். அஜித்தின் இந்த மாற்றம் அவரை வைத்து படம் இயக்க ஆசைப்படும் இயக்குனர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.