சாரி சார்!.. உங்க படத்துல நான் நடிக்க முடியாது!.. ஷங்கரிடம் சொன்ன அஜித்.. அதனாலதான் அவர் ஜென்டில்மேன்..

Published on: March 17, 2023
ajith
---Advertisement---

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் எந்திரன். இப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாகவும் நடித்திருப்பார்கள். இப்படத்திற்கு எ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருப்பார். இத்திரைப்படம் 2010ம் வருடம் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியானது.

இப்படம் இதற்கு முன்பு வெளியான அனைத்து தமிழ் திரைப்படங்களின் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இப்படத்தை அஜித்தை மனதில் வைத்துத்தான் ஒரு பிள்ளையார் சுழி போட்டாராம் ஷங்கர். அஜித்தும் ‘சரி சார் நமது சந்திப்பும் தள்ளித் தள்ளிப் போகிறது, ஜீன்ஸ் காலத்திலிருந்து நம்ம படம் பண்ணாமல் போகிறது. நாம ஒரு படம் பண்ணுவோம்’ என்று கூறியுள்ளார்.

Also Read

shankar
shankar

ஆனால், ஷங்கர் தான் மனதில் வைத்திருந்த “எந்திரன்” படத்தின் பிரம்மாண்ட கதையை அஜித்திடம் கூறும் போது அவர் மறுத்துவிட்டாராம். உடனே அஜித் நான் எப்போதும் பிரம்மாண்டத்தை விரும்பமாட்டேன், சாதாரண கதையில் ஒரு சாமானியன் ஆக நடித்துவிட்டு போனாலே போதும். நான் அப்படித்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன், இதைத்தான் என்னுடைய ரசிகர்களும் விரும்புகிறார்கள். இவ்வளவு பெரிய பிரம்மாண்டம், இவ்வளவு தொழில்நுட்பம்… அதில் நீங்கள் ஒரு திறமையான இயக்குனர்.. இப்படத்தை நீங்கள் வெற்றிகரமாக இயக்குவீர்கள்.. ஒருவேளை அந்தப்படம் தோல்வியைச் சந்தித்தால், அதனால் தயாரிப்பாளர்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளை என்னால் தாங்கமுடியாது’ என அவரிடம் விளக்கிவிட்டு அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

அதன்பிறகுதான் ஷங்கர் ரஜினியை வைத்து இப்படத்தை இயக்கினார். இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. தான் சம்பளம் வாங்கினோம், நடித்தோம் என்பதை மட்டும் மனதில் நினைக்காமல், தயாரிப்பாளர் பற்றியும் யோசிக்கும் அஜித் எப்போதும் ஜெண்டில்மேன்தான்.

இதையும் படிங்க: அப்படி சொல்லாதீங்க அண்ணே… கமலின் வார்த்தையால் கண் கலங்கி போன டி.ராஜேந்திரன்!