வேறு வழியில்லாமல் லைக்காவிடம் பேசிய அஜித்! அப்புறம் என்ன ‘விடாமுயற்சி’தானே.. அதான் இல்லைங்க

by Rohini |
ajith
X

ajith

Actor Ajith: தமிழ் சினிமாவில் தயாரிப்பு துறையில் ஒரு பெரிய நிறுவனமாக விளங்கி வந்தது லைக்கா நிறுவனம். இதன் தலைவராக சுபாஸ்கரன் இருந்து வந்தார். கோலிவுட்டில் இதன் பணிகளை பார்த்துக் கொண்டிருப்பவர் தமிழ்குமரன். லைக்கா நிறுவனத்தின் மூலம் பல பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி வசூலில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தது இந்த லைக்கா நிறுவனம்.

பெரிய நடிகர்கள் என்றாலே அவர்கள் படங்களை லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கும் என்ற ஒரு போக்கு சமீப காலமாக தமிழ் சினிமாவில் இருந்து வந்தது. ஆனால் அந்தப் போக்கையே முற்றிலுமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் லைக்கா நிறுவனம் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதற்கு காரணம் சில மாதங்களுக்கு முன் ஐடி ரைடில் சிக்கி அதனுடைய பல சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தது தான்.

இதையும் படிங்க: இந்த படத்துக்கு இவர் செட்டாக மாட்டார்!… ரஜினிகாந்தை நினைத்து தயங்கிய விசு… நம்பிக்கை கொடுத்த கே.பாலசந்தர்…

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்கள் கமல் நடிப்பில் தயாராகும் இந்தியன் 2 , ரஜினி நடிப்பில் தயாராகி இருக்கும் வேட்டையன், அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி. மூன்று முக்கிய பெரிய நடிகர்களின் படங்கள் இந்த நிறுவனத்தில் இப்பொழுது மாட்டிக் கொண்டிருக்கின்றன. இதில் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் அது ஒரு பான் இந்தியா படமாக வெளியாகுவதால் அதனுடைய மற்ற மொழி வெர்ஷன்கள் இன்னும் தயாராகாமல் இருக்கின்றதாம்.

அதனால் எப்படியும் அந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட ஆகஸ்ட் மாதத்தையும் தாண்டி போகலாம் என்று சொல்லப்படுகிறது. முதலில் வேட்டையன் படத்தை ரிலீஸ் செய்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து தான் விடாம முயற்சி படத்தை தொடங்குவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது இந்தியன் 2 படத்தை நம்பி விடாமுயற்சி திரைப்படம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ஒன்னு குறைச்சலா இருக்கு! இத விட என்ன வேணும்? ‘புஷ்பா’ படம் பற்றி இப்படி சொல்லிட்டாரே பகத்

ஆக மொத்தம் இதையெல்லாம் அறிந்து கொண்ட அஜித் நேரடியாகவே லைக்கா நிறுவனத்திடம் எல்லா பிரச்சனைகளையும் முடித்துவிட்டு வாருங்கள். அதன் பிறகு விடாமுயற்சி படத்தை பற்றி பார்க்கலாம். அதுவரைக்கும் நான் வேறொரு படத்தில் கமிட் ஆகி கொள்கிறேன் என சொல்லிவிட்டதாக ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. அதனால் கூடிய சீக்கிரம் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story