இதனாலதான் அஜித் எந்த பொது நிகழ்ச்சிக்கும் வரதே இல்ல!.. பிரபலம் என்னென்னவோ சொல்றாரே...?

by sankaran v |   ( Updated:2025-04-27 02:23:25  )
ajith
X

ajith

Ajith: நடிகர்களில் அஜித் கொஞ்சம் வித்தியாசமானவர். படங்களில் நடிப்பதோடு சரி. எந்த புரொமோஷன்லயும் கலந்துக்க மாட்டார். இதுபற்றி யூடியூப் சேனல் ஒன்றில் ஒரு விவாதம் நடந்தது. என்னன்னு பாருங்க.

சில பேர் பார்த்தா சம்பாதிக்கிறது தமிழ்சினிமாவுல தான். சாப்பிடுறது தமிழ்சினிமாவுல. வீடு கட்டிக்கிறது, சொகுசு கார் என ஆடம்பரம் எல்லாமே தமிழ்சினிமாவுல தான் வருது. ஆனா நான் இப்படித்தான் நடிப்பேன். அஜித்தே நான் எப்படி வேணாலும் இருப்பேன். எப்படி வேணாலும் நடிப்பேன்.

தமிழ்சினிமாவுல நான் எதையும் மதிக்க மாட்டேன்னு ரொம்ப மெத்தனமா இருக்காரு. இதைப் பத்தி எப்படி பார்க்குறீங்கன்னு பிரபல விமர்சகர் டாக்டர் காந்தாராஜ்கிட்ட ஆங்கர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் என்ன பதில் சொல்றாருன்னு பாருங்க.

அது மெத்தனம்னு சொல்ல முடியாது. அவரு பப்ளிக் லைஃப் தேவையில்லன்னு நினைக்கிறாரு. என்னுடைய தொழில் நடிக்கிறது. நடிக்கிற இடத்துல நீ சொல்றதை நான் செஞ்சிட்டுப் போயிடுறேன்னு சொல்றாரு.

பப்ளிக் பங்ஷனுக்குக் கூப்பிடாதே. அங்கே வந்து நான் பாப்புலரிட்டி ஆகணும்கற ஆசை இல்லை. அதாவது தேவையில்லாத இடங்களுக்கு நான் வரலங்கறாரு. அரசியல்வாதி கூட்டங்களுக்கு எல்லாம் நான் போகலன்னு சொல்றாரு. கலைஞர்கிட்டயே அவர் அதைத்தான் சொன்னாரு. எங்களை எல்லாம் ஏன் துன்புறுத்துறீங்கன்னு. உங்க கட்டாயத்துனாலதான் நான் வந்தேன்னாரு.

அதை ஏன் ஜெயலலிதாகிட்ட சொல்லல? சொல்லி இருந்தா என்ன ஆகிருக்கும்? கலைஞரோட நூற்றாண்டு விழாவுல கூட அவரை மதிச்சிக் கூப்பிட்டாங்க. அவரு வரவே இல்லை. அவரு வரணும்னு தேவையே இல்லை. அவரு கலைஞரோட வசனங்களைப் பேசல. அவர் ஒரு தமிழரே இல்லை. அவர் பார்சியும், மலையாளியும் கலந்தவரு. தமிழே அவருக்கு தாய்மொழி கிடையாது.

அவர் தமிழ்ப்படங்கள்ல நடிச்சாரே தவிர, தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? எதுக்காக வரணும்? தமிழ்நாட்டு அரசியலுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? இன்னும் பார்த்தீங்கன்னா சினிமாவுல கூட இடையில விட்டுட்டு ரேஸ் அது இதுன்னு போயிடுவாரு. அவரு நடிப்பை ஒரு பக்கம் வச்சிருக்காரு. அது அவரு ஆசை. எனக்கு தேவையில்லன்னு நினைக்கிறாரு. இது தொழில் லைஃப். என்கிறார் டாக்டர் காந்தாராஜ்.

அஜித் முக்கிய நிகழ்வுகளுக்கு வந்து கலந்துக்கணும்னு தேவையே இல்லை. நடிப்பு எல்லாத்தையும் விட இந்த பங்ஷனுக்கு வருவதைத் தான் ரசிக்கிறேன்னா அது எனக்கு தேவையே இல்லங்கறாரு. அதுல என்ன தப்பு இருக்குது? ரேஸ் அதுல தான் அவருக்கு இன்ட்ரஸ்ட். சினிமாவுல கிடையாது என்றும் சொல்கிறார்.

Next Story