தூக்கி விட்டவர்களையே ஒதுக்கிய அஜித்!. மனுஷன் இதுல கின்னஸ் சாதனையே பண்ணிடுவார் போல!..
சினிமா உலகில் நன்றியோடு இருப்பது என்பது மிகவும் அரிது. ஹிட் படங்கள் கொடுத்து பெரிய இடத்திற்கு போய்விட்டால் தன்னை வளர்த்துவிட்டவர்களையே மறந்துவிடுவார்கள். அவர்களை எங்கேயாவது சந்திக்க நேர்ந்தால் கூட பார்க்காத மாதிரி போய்விடுவார்கள். சிலர் மட்டுமே பழசை மறக்காமல் இருப்பார்கள்.
இதில் அஜித் எந்த ரகம் என்பது தெரியவில்லை. ஏனெனில், அவர் வளரும் நேரத்தில் அவருக்கு உதவியாக இருந்த யாருடனும் இப்போது அவர் தொடர்பில் இல்லை. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், பத்திரிக்கையாளர் என அவருடன் வளர்ச்சிக்கு ஏணியாக இருந்த யாரிடமும் அவர் இப்போது பேசுவதும் இல்லை, சந்திப்பதும் இல்லை.
இதையும் படிங்க: அஜித்துக்காக 10 வருஷமாக பொத்தி வைத்த டைட்டில்… அருண்விஜய்க்கு தூக்கி கொடுத்த இயக்குனர்…
அஜித்துக்கு தீனா படம் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ஒருமுறை ‘அஜித்துக்கெல்லாம் இவ்வளவு சம்பளம் கொடுப்பது வேஸ்ட்’ என முருகதாஸ் சொன்னதை கேள்விப்பட்டு அவரை அப்படியே ஒதுக்கிவிட்டார் அஜித். அதோடு, அவரிடம் சொன்ன கஜினி படத்தை சூர்யாவை வைத்து முருகதாஸ் இயக்கியதாலும் அவரின் கோபம் அதிகரித்தது.
அஜித்துக்கு மங்காத்தா எனும் வேறலெவல் ஹிட் கொடுத்தவர் வெங்கட்பிரபு. இப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகியும் வெங்கட்பிரபுவுக்கு அடுத்த வாய்ப்பை அஜித் கொடுக்கவில்லை. ஒருமுறை அவர் வேண்டாம் என சொல்லியும் அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டதால் அஜித்துக்கு கோபம் வந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல், விஜய், அஜித் இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்கப்போவதாக லூஸ் டாக்கிங் விட்டதாலும் அஜித் கோபப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரஜினி, விஜய் கூட நடிச்சு மொக்க வாங்கியதுதான் மிச்சம்! லக்கி ஸ்டார் அஜித்தான்.. வருத்தத்தில் வில்லன் நடிகர்
அஜித்துக்கு காதல் மன்னன், அமர்க்களம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சரண். அவர் செய்த ஒரு விஷயம் பிடிக்காமல் போய் மொத்தமாக அவரை ஒதுக்கிவிட்டார் அஜித். அதேபோல், அந்த படங்களில் அஜித்துக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் பரத்வாஜ். பண விவகாரத்தில் அவர் நடந்து கொண்டது பிடிக்காமல் அஜித் அவரையும் ஒதுக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அஜித்தை வைத்து 3 படங்களை தயாரித்த போனிகபூர் கூட சம்பள விஷயத்தில் ஏதோ சொதப்பியதால் இனிமேல் அவருடன் படம் பண்ண வேண்டாம் என்கிற முடிவிலும் அஜித் இருப்பதாக சொல்லப்படுகிறது. அஜித் கோபப்பட்ட ஒதுக்கியவர்களின் லிஸ்ட் இதோடு முடிந்துவிடவில்லை. மிர்ச்சி சிவா, பில்லா பட இயக்குனர் விஷ்ணு வர்தன் என இன்னும் நிறைய பேர் அதில் இருக்கிறார்கள்.