Cinema History
உங்களுக்கு ஒரு நியாயம்.. விக்னேஷ் சிவனுக்கு ஒரு நியாயமா.. அஜித் செஞ்சதை அவருக்கே செய்ய பார்த்த தயாரிப்பாளர்?!
Ajithkumar: தமிழ் சினிமாவில் மாஸ் நாயகனாக இருக்கும் அஜித்குமார் செய்யாத ஆபிரேஷன்களே இல்லை. அதில் ஏற்படும் சிரமத்தினையும் தாண்டியே கோலிவுட்டில் தனக்கான பெரிய இடத்தினை உருவாக்கி இருப்பவர். தற்போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் கூட குறைந்து இருக்கலாம்.
அதனால் தான் துணிவு படமும் சரி அடுத்து ரிலீஸாக இருக்கும் விடாமுயற்சியும் சரி படப்பிடிப்புகள் தொடங்குவதற்கே தாமதம் ஆனது. அதிலும் விடாமுயற்சி விட்டுடலாமா என லைகாவே யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இதையும் படிங்க: அந்த குழந்தையே நீங்கதான் சார்!.. ஜிதர்தண்டா-வுக்கும் ‘டபுள் எக்ஸ்’சுக்கும் இப்படி ஒரு தொடர்பா?..
முதலில் விக்னேஷ் சிவனை ஓகே செய்தால் அவரிடம் கதையே இல்லை என அஜித்தே நோ சொல்லிவிட்டார். இதை தொடர்ந்தே மகிழ் திருமேனி தற்போது அஜித்தின் அடுத்த பட இயக்குனர் என்ற அந்தஸ்த்தினைப் பெற்று இருக்கிறார். அவரும் வெயிட் செஞ்சி பல மாதங்கள் கழித்து சமீபத்தில் தான் படப்பிடிப்பு தொடங்கியது.
இப்படி இருக்கும் அஜித்குமார் ஒரு படத்துக்காக தயாரிப்பாளரிடம் கெஞ்சி இருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தின் போது அவருக்கு முதுகுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது அந்த படத்தில் இருந்து தூக்கிவிடலாம் என்ற பேச்சுகள் எழுந்தது.
இதையும் படிங்க: அசோகன் கடனாளியா மாறியதற்கு எம்ஜிஆர்தான் காரணமா? இப்படியெல்லாம் நடந்திருக்கா?
ஒரு கட்டத்தில் மற்றொரு நாயகரை புக் செய்து போஸ்டரும் ரிலீஸாகி விட்டதாம். அதை தொடர்ந்து அஜித் நேராக சென்று தயாரிப்பாளரை சந்தித்து ஒரு படத்தில் புக் செஞ்சி தூக்கப்பட்டால் என் வாழ்க்கையே போய்டும் சார். இந்த வாய்ப்பை கொடுங்க எனக் கெஞ்சினாராம்.
அதை தொடர்ந்தே தயாரிப்பாளர் ஓகே சொல்ல அந்த படத்தில் நடித்தார். அப்படத்தினை இயக்கியவர் ராஜ்கபூர். அவர் இயக்கிய இன்னொரு படமான அவள் வருவாளா படத்தில் முதுகு வலியுடன் தான் நடித்து கொடுத்தாராம். ஃப்ரீ டைமில் இயக்குனரிடம் பெர்மிஷன் கேட்டு கேரவனில் போய் வலிக்காக கொண்டு வரப்பட்ட பெட்டில் படுத்து ரெஸ்ட் எடுத்து தான் நடித்தே முடித்தார் என பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.