Connect with us
vidamuyarchi movie

Cinema News

முயற்சியே இல்லாம போன விடாமுயற்சி… அப்புறம் எங்க இருந்து சம்பளத்தை எதிர்பார்க்குறது…

அஜித்குமார் தமிழ் சினிமா முன்னணி நடிகராவார். இவர் தமிழில் அமராவதி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின் தனது கடின முயற்சியினால் வாலி, அமர்க்களம், ஆசை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் இவருக்கு வெற்றியையும் தேடி தந்தன.

இதன் மூலம் இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். பின் சில காலங்கல் உடல்நல குறைவினால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இவர் நடித்த ராஜா, பரமசிவன், ஆழ்வார் போன்ற திரைப்படங்கள் இவருக்கு தோல்வியை தேடித்தந்தது. இப்படங்களுக்கு பின் 2007ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படத்தில் மூலம் மீண்டும் தனது வெற்றி பயணத்தை தொடங்கினார். அதன்பின் வந்த பில்லா2, மங்காத்தா, விஸ்வாசம் போன்ற படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றியை தேடி தந்தன.

இதையும் படிங்க: என்னப்பா அப்டேட்னு விளையாடிக்கிட்டு இருக்கீங்க… விடாமுயற்சியை விட்டு தொலைங்கையா… காண்டான ரசிகர்கள்!

இவர் ஃபார்முலா2 கார்பந்தயவீரரும் கூட மற்றும் பைக்கில் உலகம் சுற்றும் வாலிபர். ஆனால் இதுவே இவருக்கு பிரச்சினையாகவும் வந்து நிற்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆமாம். மீகாமன், கழக தலைவன் போன்ற திரைப்படங்களின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் மகிழ்திருமேனி.

அஜித் நடிப்பில் இவர் இயக்கவிருக்கும் படம்தான் விடாமுயற்சி. இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்தினை பற்றிய அறிவிப்புகள் வந்து பல காலம் ஆன நிலையில் இன்னமும் இப்படத்தில் படபிடிப்புகள் நடைபெறவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இதையும் படிங்க: அந்த படத்த தூக்கி நம்ம படத்துல சொருவு!.. இப்படி ஆயிட்டாரே அஜித்!.. விளங்குமா விடாமுயற்சி?!…

இதனால் அஜித்தின் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இதற்கு காரணம் அஜித்தான் என்று கூறப்படுகிறது. அவர் உலகம் முழுவதும் சுற்றுலா செல்வதால் இப்படத்தில் நடிப்பதற்கு எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லையாம். மேலும் இப்படத்திற்கு அஜித்திற்கு பேசிய சம்பளம் 103 கோடியாகும்.

இதையும் படிங்க: ‘விடாமுயற்சி’யை மெகா ஹிட்டாக்க அஜித்துடன் கூட்டணி அமைக்கும் பிரபலம்!.. தரமான சம்பவம் இருக்கு!..

பொதுவாகவே அஜித் தனது படத்திற்கு வாங்கும் தொகையை மாதம் 5 கோடியாக தனது வங்கி கணக்கில் வாங்கி கொள்வது வழக்கமாய் கொண்டிருப்பார். அதன்படி இப்படத்திலும் வாங்கியுள்ளார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாய் எவ்வித பணமும் தனது கணக்கிற்கு வரவில்லையாம். இதற்கு காரணம் இதுவரை விடாமுயற்சி பட்பிடிப்பில் கலந்து கொள்ளாததுதானாம் என நெட்டிசன்கள் மத்தியில் தகவல்கள் உலாவுகின்றன.

google news
Continue Reading

More in Cinema News

To Top